கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது புதிய வரவுகளுடன் சேர்ந்து உற்சாகமாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து தற்போது சூனியக்காரி, சண்டைக்காரியான காயத்ரி வெளியேற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு கமல்ஹாசனுடன் பேசிய காயத்ரியிடம் ரசிகர்கள் தங்களின் கேள்விகளை கேட்டனர். எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக நீங்கள் தான் படிக்கும் மாணவர்களுக்கு இருக்குறீர்கள்.

அதனால், உங்களை எங்களுக்கு பிடிக்காது. பொது இடத்திற்கு வந்துவிட்டால் யார் வேண்டுமென்றாலும், அறிவுரை வழங்கலாம். ஒரு தாயாக நான் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று காயத்ரிக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டன் பிரபல டான்ஸ் மாஸ்ட்டர்,...! ரசிகர்கள் ஷாக் ..!

அதன் பிறகு காயத்ரியிடம் உள்ள குறைகளும், அவர் செய்த தவறுகளும் அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஓவியாவை இன்னும் நீங்கள் மிஸ் பண்ணுறீங்களா என்று கேட்க, பிக்பாஸே அவரை மிஸ் பண்ணுகிறது என்று பெருமையாக கூறியுள்ளார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த காயத்ரி தற்போது கமலிடம் பேசும் போது வேறு ஒருவராக காட்சியளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ரகுவரன் இஸ் பேக்; தனுஷின் ’வி.ஐ.பி-2’ ரிலீஸ் டேட் வந்தாச்சு!

ரொம்ப சந்தோஷமாக, மக்கள், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்தார். அதன் பிறகு கமலுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். இதற்கு முன்னதாக நான் விஜய்யின் தீவிர ரசிகை என்று பெருமையாக கூறியுள்ளார்.