Connect with us
Cinemapettai

Cinemapettai

நீ கப்பு வாங்க வாய்ப்பே இல்ல தாமரை… அடிச்சு கூறிய ராஜு பாய் வீடியோ

Videos | வீடியோக்கள்

நீ கப்பு வாங்க வாய்ப்பே இல்ல தாமரை… அடிச்சு கூறிய ராஜு பாய் வீடியோ

பிக் பாஸ் சீசன் 5ல இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் தருகிறார்.

அதில் நான் ஓங்கும் கையாக இருப்பேன் என்று நினைப்பவர்க்கு 100% என்கிற கப்பை தரவேண்டும். இன்னொருவருக்கு வாய்ப்பே கிடையாது என்ற பட்டம் தர வேண்டும் என்று சொல்கிறார்.

முதலாவதாக வரும் ராஜு, இமான் அண்ணாச்சிக்கு 100% என்ற கப்பை தருகிறார். தாமரைக்கு வாய்ப்பே இல்லை என்ற பட்டம் தருகிறார். அதைப் பெற்றுக் கொண்ட தாமரை காரணம் கேட்பார்கள் சொல்லு என்று ராஜுவிடம் கூறுகிறார்.

அதற்கு பதிலளித்த ராஜு ஓவரா வாய் பேசுறாங்க சார் என்று கமலிடம் சொல்கிறார். உடனே தாமரை இந்த வீட்டில் வாய் பேசலாமா, கூடாதா என்று கமலிடம் முறையிடுகிறார். அதற்கு கமல் பேசலாம் பேசலாம் என்று நக்கலாக பதிலளிக்கிறார்.

மேலும் வாய் பேசலாம், ஆனால் என்னவாய் பேசுகிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்ற ஆண்டவரின் பஞ்ச் டயலாக் கோடு ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோவை பார்க்கும் போது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் தாமரைக்கு இன்றைய எபிசோடில் ஆண்டவர் நல்ல பதிலடி கொடுப்பார் என்று தெரிகிறது.

இந்த வாரம் இசை வாணி வெளியேறுகிறார் என்ற ஒரு செய்தி நிலவி வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் வரும் வாரம் நிச்சயம் தாமரை வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top