fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நாணயத்தை வைத்து நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் போட்டியாளர்கள்.. வசமாக சிக்கும் பிரியங்கா

priyanka-bigg-boss

Videos | வீடியோக்கள்

நாணயத்தை வைத்து நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் போட்டியாளர்கள்.. வசமாக சிக்கும் பிரியங்கா

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று அபிஷேக் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவற்கான நாமினேஷன் இன்று நடைபெறுகிறது.

அதில் பவானி, இசை வாணி, அபிநய், வருண், இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்கா ஆகியோர் நாமினேட் ஆகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்.

கடந்த வார டாஸ்க்கில் வெற்றி பெற்று நாணயங்களை கைப்பற்றியவர்களுக்கு ஒரு சலுகை கொடுக்கப்படுகிறது, அதாவது நாமினேட் ஆனவர்கள் தங்களிடமுள்ள நாணயங்களை வைத்து வேறு யாரையாவது நாமினேட் செய்ய முடியும்.

இந்த சலுகையை பயன்படுத்தி யாரையாவது நாமினேட் செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று பிக்பாஸ் கூறுகிறார். உடனே சிபி, ராஜு, நிரூப் போன்றோர் தங்கள் கைகளை தூக்குகின்றனர்.

இதை வைத்து பார்க்கும் பொழுது நாமினேட் ஆகாத நிரூப் தன்னிடமுள்ள நாணயத்தை வைத்து பிரியங்காவை காப்பாற்றுவார் என்று தெரிகிறது. நாணயம் வைத்துள்ள பவானி தன்னை காப்பாற்றிக்கொள்ள அக்ஷராவை நாமினேட் செய்வார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அபிஷேக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு தற்போது ப்ரோமோ கூட விறுவிறுப்பு குறைந்து உள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு விடுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top