Videos | வீடியோக்கள்
கத்தியில் ரத்தம் சொட்ட நிற்கும் பிக்பாஸ் கவின்.. 6 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட லிப்ட் பட மோஷன் போஸ்டர்
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின் . இந்த சீரியலின் மூலம் கவின் புகழின் உச்சத்திற்கு சென்றார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் அனைவருக்கும் தெரியக்கூடிய ஒரு நடிகராக பரிச்சயமானவர்.
இந்த தொடர் முடிந்த பிறகு விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.
பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற கவின் முதல் வாரத்திலிருந்து ரசிகர்கள் கவின் தான் வெற்றி பெறுவார் என எதிர் பார்த்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இவர் ஒரு சில சேட்டைகள் செய்ய சிறிது நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.
கவின் நடிப்பில் ஹீரோவாக வெளியான நட்புனா என்ன தெரியுமா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதனால் ரசிகர்கள் இவர் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என எதிர்பார்த்திருந்தனர்.
கவின் தற்போது லிப்ட் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.
லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதன் பின்னணி இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
