பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கைகளின் மூலம் தமிழ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி.

juli

இவர் தான் செய்த தவறைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்து வருவது நெட்டிசன்களை மேலும் கோபமாக்கி வருகிறது.

தற்போது அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போது ஒரு புகைப்படம் ரசிகர்களை கோபமாக்கியுள்ளது.

இந்த நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

இதேபோல் ஒரு லுக்கில் ஓவியாவின் சில புகைப்படங்கள் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் ஓவியாவை காப்பி அடிப்பதை எப்போது நிறுத்துவீர்கள் என ஓவியா ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

oviya

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பற்றி தவறாகப் பேசிப்பேசி, வெளியே அனுப்பிவிட்டு இப்போது ஓவியா மாதிரியே இருக்க முயற்சி செய்கிறீர்களா என்கிற தொனியில் பலரும் ரிப்ளை செய்திருக்கிறார்கள்.

காட்டுல வெள்ளையா ஒரு உருவம் மாதிரி புகையா கிளம்பும்… – கிளம்பிருச்சுப்பா..! கிளம்பிருச்சுப்பா..!