Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ரீப்ரியாவிற்கு துணிச்சல் இருந்தால் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லலாமே? காயத்ரி சவால்

என்னை கலாய்க்கும் நடிகை ஸ்ரீப்ரியா துணிவு இருந்தால் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியுமா என நடன இயக்குனர் காயத்ரி சவால் விடுத்து இருக்கிறார்.

தமிழ் ரசிகர்களுக்கு ரியாலிட்டி ஷோக்களிலேயே அதிக லைக்ஸ்களை குவித்து இருப்பது பிக்பாஸ் தான். வெள்ளித்திரையில் ஹிட் அடித்த கமல்ஹாசன் முதல்முறையாக தொகுப்பாளராக களம் இறங்கினார். காயத்ரி ரகுராம், ஓவியா, அனுயா, நமீதா, சக்தி, வையாபுரி, சினேகன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வித தொடர்பும் இல்லாமல் முழு கேமரா கண்காணிப்பில் இருக்க வேண்டும் இது தான் இந்நிகழ்ச்சியின் ஹைலைட். பல பொழுதுபோக்குகள் இருந்தாலும், அதிக சர்ச்சைகள் நிகழ்ச்சிகள் இருந்தது. இதில் முதல் ஆளாக சிக்கியவர் காயத்ரி ரகுராம் தான். சேரி பிஹேவியர், விஷம், ஹேர் உள்ளிட்ட வார்த்தைக்களை வெளியிட்டு பலரின் மீம் மெட்டிரியல் ஆனார். அவரை பலரும் விமர்சிக்க தொடங்கினார்.

பிரபலங்களில் நடிகை ஸ்ரீபிரியா கமலுடனான நிகழ்ச்சியிலேயே மூடியை தூக்கி காட்டி காயத்ரி மீதான இந்த சர்ச்சையை மீண்டும் வைரலாக்கினார். இந்நிலையில், பல நாட்கள் கழித்து ஸ்ரீப்ரியாவை விமர்சித்து காயத்ரி ரகுராம் ஒரு ட்வீட் செய்து இருக்கிறார். அப்பதிவில், ஸ்ரீப்ரியாவை நான் அக்கா என்று அழைக்க அவர் என் சகோதரி இல்லை. என் ஆன்ட்டி இல்லை, தோழி இல்லை, நல விரும்பி இல்லை, பாஸோ, சக ஊழியரோ இல்லை. அவர் எனக்கு சோறு போடவில்லை. அவர் என் அப்பா, அம்மாவுடன் பணியாற்றியிருக்கலாம். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலாய்ப்பவர்களில் ஒருவர் அவ்வளவு தான் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து, இப்பதிவு வைரலானது.

அதில், ரசிகர் ஒருவர் ஆமாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடியை தூக்கி காண்பித்து உங்களிடம் கேட்க சொன்னது அவர் தான் எனக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த காயத்ரி, கெட்ட வார்த்தை என்பதால் அவருக்கு ஹேர் என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் இன்னும் அதை வைத்துள்ளார் என்று தெரியவில்லை என ரீ ட்வீட் தட்டினார். தொடர்ந்து, அவருக்கு துணிச்சல் இருந்தால் பிக்பாஸ் வீட்டுக்குள் போக முடியுமா என சவால் விடுத்து பதிவிட்டு இருக்கிறார். ஸ்ரீப்ரியா மேடம் பதில் சொல்லுங்கோ?

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top