gayathri

விஜய் டிவி நடத்திவரும் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா இல்லாததால் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டன, பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு புகழ்பெற முக்கிய காரணம் ஓவியா. இதனை அடுத்து ஜூலியும் , காயத்ரியும்தான். ஓவியா மற்றும் ஜூலி வெளியேறினாலும் ஓரளவுக்கு டிஆர்பியை நிறுத்தி வைக்க காய்த்ரி உதவினார்.

இவர் என்னதான் செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள்.காயத்ரி வெளியே போனபிறகு மழை பெய்து ஓய்ந்தது போலவே இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது மேற்சொன்ன 3 பேரும் வெளியேறியதால் நிகழ்ச்சி யாரையும் பெரிதாக கவரவில்லை.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிலேயே காயத்ரிக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுவாக எல்லா போட்டியாளர்களை போலவே இவருக்கும் ரூ 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், நாள் ஒன்றுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் சம்பளம் பேசப்பட்டு 56 நாட்கள் இருந்த அவருக்கு ரூ 28 லட்சம் அளிக்கப்பட்டுள்ளதாம். இது மற்ற எல்லோரையும் விட அதிகம்.பிக்பாஸில் வில்லியாக இருந்தாலும் சம்பள விஷயத்தில் கில்லி என நிரூபித்து இருக்கிறார் காயத்ரி.