Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைப் போற்று மொக்க படம், எனக்கு சுத்தமா பிடிக்கல.. ரசிகர்களை கடுப்பேற்றிய பிக் பாஸ் பிரபலம்
சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை அனைவரும் ஆகா, ஓகோ என கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் படம் பிடிக்கவில்லை என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கூறியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேசன் தளத்தில் தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று படம் முதல்நாளே 55 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியது.
மேலும் அமேசான் தளத்தில் இதுவரை எந்த ஒரு ஹாலிவுட் படமும் செய்யாத சாதனையை சூரரைப்போற்று செய்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை அனைவரும் சூரரைப்போற்று படத்தை பாராட்டி கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் படம் தனக்கு பிடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு மட்டும்தான் சூரரை போற்று படம் பிடிக்கவில்லை போல என்று வைஷ்ணவி கூறியுள்ளது சூர்யா ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. வைஷ்ணவியிடம் சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
படம் பிடிக்கும், பிடிக்காது என்பது அவரவர்களின் தனிப்பட்ட கருத்துதான். இருந்தாலும் சூர்யாவின் ரசிகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார் அந்த பிக்பாஸ் வைஷ்ணவி.

biggboss-vaishnavi-cinemapettai
