Tamil Cinema News | சினிமா செய்திகள்
அரண்மனை மூன்றாம் பாகத்தில் இணைந்த பிக்பாஸ் நாயகி.. அப்படினா டிரஸ்க்கு பட்ஜெட் தேவையில்லை
ஒரு காலத்தில் பேய் படங்களாக வரிசை கட்டி வந்த போது எனக்கும் பேய் படம் எடுக்கத் தெரியும் என களத்தில் குதித்தவர் சுந்தர் சி. அவரது நேரமோ என்னமோ அரண்மனை படம் ஹிட் ஆகிவிட்டது. வெற்றிபெற்ற படத்தை இரண்டாம் பாகம் எடுக்கும் காலம் வந்தபோது மீண்டும் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார்.
அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் சுமாராகத்தான் சென்றது. இருந்தும் முதலுக்கு மோசம் இல்லை என்பதைப்போல ஓரளவு ஓடி பெயரை காப்பாற்றிக் கொண்டது. சமீபகாலமாக சுந்தர் சி இயக்கிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
கலகலப்பு-2 படத்தை தவிர விஷால் நடிப்பில் வந்த ஆக்சன் படம் படுதோல்வியை சந்தித்தது. இனி வழக்கம்போல் நமக்கு காமெடி தான் செட் ஆகும் என அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க சன்பிக்சர்ஸ் இடம் கேட்டுள்ளார்.
அவர்களும் பச்சை கொடி காட்டி விட்டதாக தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அரண்மனை 3 படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளார். தற்போது மூன்று நாயகிகள் தேவைப்பட்ட நிலையில் இரண்டாவதாக பிக்பாஸில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

sakshi
ஏற்கனவே சாக்ஷி ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் டெடி படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
