முதல் முறையாக ஒரு தொகுப்பாளராக களமிறங்கி, நடிகர் கமலஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும், பிரபலங்களிடமும் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமானபோது, தமிழ் திரையுலகை சேர்ந்த 14 பிரபலங்களும், ஜல்லிக்கட்டில் பிரபலமான ஜூலி உட்பட 15 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒரு நபர் எலிமினேட் செய்யப்படுவார் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதி. இந்நிலையில் இது வரை அனுயா, ஸ்ரீ ராம், கஞ்சா கருப்பு, ஆர்த்தி, பரணி என மேலும் பல  பேர் வெளியேறியுள்ளனர்.

இன்னும் 5 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். அடுத்ததாக யார் இதில் இருந்து வெளியேற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் அதிக அளவில் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டதற்காக போட்டியாளர்களுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டாலும் இவர்கள் ஜெயித்தால் இவர்களுக்கு என்ன பரிசு கிடைக்கும் எவ்வளவு பரிசு தொகை கிடைக்கும் என்கிற எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில்.

ஒருநாள் நள்ளிரவு ஓவியாவை உசுப்பேற்றி திட்டி வந்த காயத்ரி, வின்னர் அவங்கதான்.. 50 லட்சத்தை வாங்காமல் போக மாட்டாங்க என்று வாய் உளறி சொல்லிவிட்டார். இதில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிப்பவருக்கு 50 லட்சம் பரிசு ரொக்க தொகையாக வழங்க உள்ளது தெரியவந்துள்ளது. biggboss நிகழ்ச்சி முடிவுக்கு வரபோகிறது.இதற்காக போராடி வருகின்றனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சுஜாவுடையது நடிப்பல்ல என்று புகைப்பட ஆதாரத்தோடு காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

செப்டம்பர் 30-ம் தேதி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. கடைசிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சிநேகன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சுஜா இருக்கும் போது, சமூகவலைத்தளத்தில் பலரும் அவர் ஓவியாவை இமிடேட் செய்கிறார் என்று கூறிவந்தார்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து சுஜா வெளியேறிய நிலையிலும் அதே கருத்தைத் தெரிவித்து அவரை சாடி வந்தார்கள்.

இந்த சர்ச்சைக் குறித்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காஜல், சுஜாவைப் பற்றிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் கூட அவர் போலியாக நடிக்கிறார் என்றுதான் நினைத்தேன், ஆனால் அவர் மிகவும் கடினமான காலத்தை அனுபவித்தார், அது நடிப்பல்ல..