Connect with us
Cinemapettai

Cinemapettai

julie-vanitha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜூலியை அசிங்கப்படுத்திய வனிதா.. ரணகளமான பிக்பாஸ் அல்டிமேட் வீடு!

பல ரியாலிட்டி ஷோக்களை பிரமாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி வந்த விஜய் டிவி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் திறம்பட நடத்தி வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து விறுவிறுப்பை கூட்டி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது மேலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் திருடன், போலீஸ் விளையாட்டை விளையாடி வருகின்றனர்.  அதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதலும், வாக்குவாதமும் ஏற்படுகிறது.

எப்போதும் சண்டை போடுவதிலேயே குறியாக இருக்கும் வனிதா இன்று ஜூலியுடன் தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். போலீசாக இருக்கும் ஜூலியிடம், வனிதா கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பத்திரமாக இருக்க வேண்டும். இந்த டிராமா கம்பெனி எல்லாம் இருந்தா எல்லாத்தையும் உடைத்து விடுவேன் என்று கூறுகிறார்.

கடந்த முதல் சீசனில் ஜூலி விவரம் இல்லாமல் செய்த ஒரு தவறை இத்தனை வருடங்களுக்கு பிறகும் அதைப் பற்றி போட்டியாளர்கள் அனைவரும் கூறுவது அவரின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் ஜூலி அதை எதிர்த்து நின்று சமாளிப்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒன்று.

இருந்தாலும் வனிதா விடாப்பிடியாக ஜூலியை வாடி போடி என்று ஏக வசனத்தில் கூறுவது, மூடிட்டு போ, வாய மூடு, பைத்தியம் போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இது ஒரு பக்கமிருக்க தாமரை, அபிநய் உடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி வீட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் மல்லுக்கட்டி கொண்டிருப்பதை பார்க்கும் போது சிறு எரிச்சல் வருகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் ஜூலியை இவ்வளவு இளக்காரமாகப் பார்க்கும் போட்டியாளர்களை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.

மேலும் எப்பவோ கூறிய ஒரு பொய்க்கு ஜூலி நிறைய அனுபவித்து விட்டார், அவரை மேலும் மேலும் குத்திக் காட்டிப் பேசுவது நியாயமில்லை ஜூலிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top