புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொம்மையை கொடுத்து சூனியம் வைத்த பிக்பாஸ்.. எதிரும் புதிருமாக நிற்கும் ஹவுஸ் மேட்ஸ்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடைபெறுகிறது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் வரும்போது ஏகப்பட்ட சண்டை, பிரச்சனைகள் இருக்கும்.

அப்படித்தான் இந்த சீசனிலும் உரசல் ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புரோமோவில் யாரும் எதிர்பார்க்காத இருவர் அடிதடியில் இறங்கி இருப்பது இது என்ன புது ட்விஸ்ட் என நினைக்க வைத்துள்ளது.

அதாவது பிக் பாஸ் புது ரூல் ஒன்றை சொல்கிறார். வெளியே இருக்கும் நபர்கள் போட்டிக்குள் வரலாம் என அனுமதி கொடுக்கிறார். அதை அடுத்து ஜெஃப்ரி, ராணவ், ரயான் மூவரும் பொம்மைக்காக சண்டை போடுகின்றனர்.

பிக்பாஸ் பற்ற வைத்த நெருப்பு

அவர்களுக்குள் கடும் தகராறு ஏற்படும் நிலையில் ராயன் ராணவை அடிப்பதற்கு பாய்கிறார். இதை எதிர்பார்க்காத மற்ற போட்டியாளர்கள் தடுக்க வருகின்றனர். ஆனால் நிலைமை கைமீறி போகிறது.

இருவரும் விட்டால் கட்டி உருளும் அளவுக்கு ஆக்ரோஷமாக சத்தம் போடுகின்றனர். இப்படியாக வெளிவந்துள்ள புரோமோ ரசிகர்களை பொருத்தவரை சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

இவ்வளவு நாள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த ரயான் உண்மை குணத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டார். இதுபோல் இன்னும் கடுமையான டாஸ்க் கொடுத்தால் நிகழ்ச்சியும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

அந்த வகையில் வார இறுதியில் விஜய் சேதுபதி விசாரிப்பதற்கு இந்த வாரம் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அதேபோல் சாச்சனாவின் வெளியேற்றத்தை காணவும் ஆடியன்ஸ் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News