fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சஞ்சீவ்-வை கோபப்படுத்திய தாமரை.. ஓட்டு போட்ட மக்களை மதிக்க மாட்டாங்களாம்!

biggboss5

Videos | வீடியோக்கள்

சஞ்சீவ்-வை கோபப்படுத்திய தாமரை.. ஓட்டு போட்ட மக்களை மதிக்க மாட்டாங்களாம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அக்ஷரா மற்றும் வருண் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அதை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல் வரை வருவதற்கு யார் தகுதியானவர்கள் இல்லை என்று போட்டியாளர்கள் முடிவு செய்து கூற வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் காரசாரமாக விவாதித்து கொண்டிருக்கின்றனர். அப்போது பிரியங்கா, தாமரையிடம் உனக்கு இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டுமா என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் தாமரை யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம் என்று மழுப்பலாக சொல்கிறார்.

இதனால் கடுப்பான சஞ்சீவ் நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது, உங்களுக்கு எதுவும் தெரியாம தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தீங்களா என்று கேட்கிறார். அதற்கு கோபமான தாமரை எனக்கு என்ன நடந்ததோ அதை பற்றிதான் நான் பேச முடியும் என்று சொல்கிறார்.

இப்படியே மாறி மாறி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு கிடையாதா என்று சஞ்சீவ் கேட்கிறார். ஆனால் அதற்கு தாமரை நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலாக யாரு ஜெயிச்சாலும் சந்தோஷம் தான் என்று சொல்கிறார்.

உடனே தாமரைக்கு புரிய வைக்கும் விதமாக பிரியங்கா மீண்டும் அவரிடம் உனக்கு ஜெயிக்க வேண்டுமா, வேணாமா என்று கேட்கிறார். இந்த நேரிடையான கேள்விக்கு தாமரை எனக்கு ஜெயிக்க வேண்டாம் என்று பதில் சொல்கிறார்.

ஒரு வாக்குவாதம் என்று வந்துவிட்டால் தாமரை அதில் தெளிவாக பதில் கூறாமல் சமாளிப்பாக மட்டுமே பேசுகிறார். இத்தனை வாரங்களாக தாமரைக்கு, ரசிகர்கள் பலரும் ஓட்டுப்போட்டு காப்பாற்றியுள்ளனர். ஆனால் அவர் அதை பற்றி நினைக்காமல் இன்று எனக்கு பிக்பாஸ் போட்டியில் ஜெயிக்க வேண்டாம் என்று கூறுவது நிச்சயம் அவருக்கு நிகழ்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். இன்று இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top