Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

தலையில் முட்டையை உடைத்த தாமரை, இசைவாணி.. கலவரமான பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 5 ல் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு என் கேள்விக்கு என்ன பதில் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்கிறார்.

முதலாவதாக இசைவாணி மற்றும் தாமரைச்செல்வி இருவரும் வருகின்றனர். இருவரும் எதிர் எதிரே சேரில் அமர்ந்து இருக்க, அவர்களுக்கு நடுவில் ஒரு கிண்ணத்தில் முட்டை வைக்கப்பட்டுள்ளது.

இப்போது பிக்பாஸ் யாரிடம் கேள்வி கேட்கிறாரோ அவர் சரியான பதிலை சொல்ல வேண்டும். தவறான பதிலை கூறுபவர்கள் எதிரில் இருப்பவர் தலையில் ஒரு முட்டையை உடைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்கின் விதிமுறை.

ஏற்கனவே புகைச்சலில் இருக்கும் தாமரை மற்றும் இசைவாணி இருவரும் வேண்டுமென்றே தவறான பதிலை கூறுகின்றனர். பிக்பாஸ் கன்பெக்சன் ரூமிற்கு முதலில் வந்த நபர் யாரென்று இசைவாணியிடம் கேட்கிறார். அதற்கு இசைவாணி தெரியவில்லை என்று கூறி தாமரையின் தலையில் முட்டையை உடைக்கிறார்.

முட்டையை உடைக்கும்போது இசைவாணி, தாமரையிடம் பயப்படாத இது கல்லு இல்லை என்று கூறி ஓங்கி தலையில் அடிக்கிறார். அதற்கு பழிவாங்கும் விதமாக அடுத்த கேள்விக்கு தாமரை தெரியாது என்று கூறி இசைவாணியின் தலையில் முட்டையை உடைக்கிறார்.

இருவரும் மாற்றி மாற்றி முட்டையை தலையில் உடைத்து கொள்வதை சக போட்டியாளர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பொழுது நிரூப், தாமரையிடம் நீ வேண்டும் என்று தப்பாக பதில் சொல்லி முட்டையை உடைக்கிறாய் என்று கூறுகிறார். அதற்கு தாமரை நீயா அப்படி நினைச்சுகிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்று பதிலளிக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் எதிரும் புதிருமாக இருக்கும் தாமரை, இசை வாணியின் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை சின்ன விஷயத்தை கூட பெரிதாக எடுத்துக் கொள்வதுதான். இப்படியே சென்றால் அடுத்தடுத்த வாரங்களில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Continue Reading
To Top