கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர்கள் ஜீவன் மற்றும் ரச்சனா. 100 படங்களுக்கு மேல் துணை நடிகராக நடித்துள்ள ஜீவன் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ள கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு அருகே நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்து விட்டார். உடன் சென்ற ரச்சனாவும் விபத்தில் பாலியாகி விட்டார்.

jeevan-and-rachna-2காரை ஓட்டியது ஜீவன்தான். ஜீவன் தூக்க கலக்கத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது காரை மோதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜீவனுக்கு பக்கத்தில் ரச்சனா அமர்ந்து இருந்தார்.

இருவரும் பலியானது கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜீவனை விட ரச்சனா மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jeevan-Rachana