நைட்டியில் வீடியோ போட்ட பிக்பாஸ் அர்ச்சனா.. வச்சு செய்ய ஆரம்பித்த நெட்டிசன்கள்

அர்ச்சனா எந்த நேரத்தில் விஜய் டிவியில் காலை எடுத்து வைத்தாரோ அன்றிலிருந்து அவருக்கு பிடித்தது சனி. போறவங்க வர்றவங்க எல்லாம் கண்டபடி திட்டும் அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல தொகுப்பாளர் என்ற பெயருடன் வலம் வந்தார் அர்ச்சனா. பேசாமல் அங்கேயே இருந்திருந்தால் தலை தப்பித்திருக்கும். ஆனால் வான்டட்டாக விஜய் டிவிக்கு சென்று வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தன. அதை எல்லாம் புரிந்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய அதில் வீடியோ போட்டுக் கொண்டிருந்தார்.

அதிலும் ஆரம்பத்தில் நல்ல முறையாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எந்த நேரத்தில் பாத்ரூம் டூர்(bathroom tour) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினாரோ அதோடு முடிந்தது அவரது சோலி. சின்ன யூடியூப் சேனல் முதல் பெரிய யூடியூப் சேனல் வரை மொத்தமும் வச்சு செஞ்சு விட்டார்கள். போதாக்குறைக்கு தரக்குறைவான விமர்சனங்களும் அர்ச்சனா மீது வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சைகளை கிளப்பி கொண்டிருக்கும் அர்ச்சனா சமீபத்தில் தன்னுடைய பிக்பாஸ் நண்பர்களுடன் நைட்டி அணிந்து கொண்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக மீண்டும் வைரலாக மாறியுள்ளார் அர்ச்சனா. இது எந்த அளவுக்கு பெரிய பிரளயத்தை கிளப்பப் போகிறது என்பது தெரியவில்லை.

archana-nighty-wear-cinemapettai
archana-nighty-wear-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்