Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரில் திடீர் மாற்றம்.. நடிகருக்கு பதிலாக வரும் பிரபல நடிகை
ஹிந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் மிக பிரபலமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நான்காவது சீசன் சென்று கொண்டிருக்கிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் தெலுங்கில் பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் தற்போது படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாம்.

biggboss-telugu
இதனால் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என்ற குழப்பத்தில் டிவி சேனல்கள் இருந்துள்ளன.
அதனால் அவரைப் போலவே மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ராஜமாதா ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்துள்ளார்களாம்.

ramya-krishnan-cinemapettai
இவர் ஏற்கனவே தங்க வேட்டை போன்ற குறிப்பிடும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
