Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss123

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸை தொகுத்து வழங்க மோகன்லாலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்து தற்போது மலையாள கரையோரம் ஒதுங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மோகன்லாலின் மெகா சம்பளம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களிடம் சக்கை போடு போட்ட ரியாலிட்டி ஷோக்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. பிக்பாஸ் இந்தி மக்களுக்கு மட்டுமே பரிச்சையமான ஒன்று. இதுவரை 11 சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் பெருவாரியான சீசன்களை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். கன்னடத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அப்படி அந்நிகழ்ச்சியில் என்ன இருக்கும் சுவாரசியம் என பலரும் யோசித்து கொண்டு இருக்க, கடந்த வருடம் தமிழில் கால் பதித்தது. உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் வெர்சனை தொகுத்து வழங்கினார். ஒரே வீட்டில் 15 பிரபலங்களை 100 நாட்கள் அடைத்து வைப்பர். அவர்களுக்கு வெளியுலக தொடர்பு எதுவும் இருக்காது. அங்கு ஏற்படும் சண்டை, சர்ச்சைகளை மீறி யார் 100 நாட்கள் தாக்குப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கே 50 லட்சம் பரிசு.

இது போட்டியாளர்களுக்கு எப்படியோ பார்க்கும் ரசிகர்களுக்கு வித்தியாசமாகவே அமைந்தது. சண்டைகள் பெரிய வைரலாகியது. அப்படி தான் முதல் சீசன் தமிழ் பிக்பாஸ் சக்கை போடு போட்டது. தற்போது இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதல் வாரம் டல் அடித்தாலும், இந்த வாரத்தில் சண்டை ஏற்படும் என ரசிக கண்மணிகள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் முதல் சீசன் கடந்த ஞாயிறுக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் தொகுத்து வழங்கினார்.

இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். கேரளாவின் முன்னணி நடிகையாகவும், தமிழில் ‘அரவான்’ படத்தில் நடித்திருந்த நடிகை ஸ்வேதா மேனன், நடிகைகள் நேகா சக்சேனா, ஹிமா ஷங்கர், பீலி மானே, அர்ச்சனா கவி, 2000ம் ஆண்டில் ‘மிஸ் கேரளா’ பட்டம் பெற்ற ரஞ்சினி ஹரிதாஸ், ‘கிஸ் ஆப் லவ்’ போராட்டத்தில் முன்னின்ற தியா சனா, ‘ஆக்ஷன் ஹீரோ பைஜூ’ புகழ் அரிஸ்டோ சுரேஷ், காமெடி நடிகர் அனூப் சந்திரன், ‘பதியே’ ஆல்பம் புகழ் பசீர், சீரியல் நடிகர்கள் தீபன் முரளி, ஸ்ரீ லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன்லாலுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ 12 கோடி ரூபாய் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவர் வாங்கும் ஒரு படத்தின் சம்பளத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top