Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாராவுடன் கவர்ச்சி கதகளி ஆட போகும் பிக்பாஸ் நாயகி.. அம்மன் படத்தில் நடிக்க வேண்டிய ஆளா இது?
சமீபகாலமாக நயன்தாரா பெரிய நடிகர்களுக்கு ஜோடி போடும் அதுமட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் தனி ஒருவராக கலக்கி வருகிறார். அறம், டோரா, மாயா போன்ற படங்கள் இவரது திறமைக்குச் சான்றாகும்.
முன்னணி நடிகர்களின் படங்களை போலவே நயன்தாரா தனியாக நடிக்கும் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருப்பதைக்கண்டு இந்திய சினிமா நடிகைகள் மிரண்டு போயுள்ளனர். தற்போது நயன்தாரா ஆர் ஜே பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாரா அம்மனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எதிரி கொண்டிருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் யாஷிகா இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.
நயன்தாராவே கவர்ச்சியில் ஒரு ரவுண்டு வருவார். கூடவே யாஷிகாவும் சேர்ந்து விட்டால் சொல்லவே வேண்டியதில்லை. அம்மன் படம் என்பதால் நயன்தாராவிடம் கவர்ச்சி எதிர்பார்க்க முடியாது. ஆனால் யாஷிகாவுக்கு கண்டிப்பாக கோவில் நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போடும் கேரக்டர்கள் தான் கிடைக்கும் கோலிவுட் வாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
இருந்தும் அம்மனை தரிசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்..
