Connect with us

Cinemapettai

மார்க்கெட் ராஜாவாக மஜா பண்ணும் பிக்பாஸ் ஆரவ்.. ட்ரெண்ட் ஆகும் டிரெய்லர்

aarav-marketraja

Videos | வீடியோக்கள்

மார்க்கெட் ராஜாவாக மஜா பண்ணும் பிக்பாஸ் ஆரவ்.. ட்ரெண்ட் ஆகும் டிரெய்லர்

பிக்பாஸ் சீசன்2 வில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனவர், ஆரவ். அந்த சீசனில் ஆரவ் மற்றும் ஓவியாவின் காதல் கதையை மையமாக வைத்தே டிஆர்பியை ஏற்றியது, விஜய் டிவி. இதில் இவர்கள் கொடுத்த மருத்துவ முத்தம், உலகத்தில் எந்த மருத்துவர்களாலும் கண்டுபிடிக்கமுடியாத மருந்து வகை ஆகும்.

சமீபகாலமாக காதல் நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் எடுத்துக்கொள்ளும் மருந்தாக மருத்துவ முத்தம் ஆகியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தற்போது பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் தமிழ் சினிமாவில் ஈசியாக நுழைந்தது விடுகின்றனர். அந்த ரோட்டில் வந்த ஆரவ், தற்போது மார்க்கெட் ராஜா எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை தல அஜித்தின் ஹிட் படங்களை இயக்கிய சரண் டைரக்ட் செய்துள்ளார்.மேலும் காவியா, முனிஸ்காந்த் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சைமன் கே. கிங் இசை அமைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த கொலைகாரன் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

மார்க்கெட் ராஜா படத்தின் டிரைலர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.இதன் டிரைலரை பார்க்கும்போது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் இரண்டாம் பாகம் போலவே தோன்றுகிறது. இருந்தாலும், ரவுடி பேய் என்ற கான்செப்ட் மூலம் சரண் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இதனால் படத்தின் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம். அதிரடியுடன் காமெடியையும் கலந்து உருவாகியுள்ளதை போல் பிரதிபலிக்கிறது ட்ரைலர்.

இதோ ட்ரெய்லர் உங்கள் பார்வைக்கு:-

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top