பிக் பாஸ் தான் கடந்த சில நாட்களுக்கு முன் டிரென்டிங் டாப்பிக். யூடியூப் சென்று டிரென்டிங் வீடியோக்குள் சென்றால் 99% பிக் பாஸ் தமிழ் வீடியோக்கள் தான். சரி ஃபேஸ்புக்குள் வந்தால் அனைவரும் பிக் பாஸ் ஹேஷ்டாக் போட்டு தான் பதிவு செய்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது, நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார். இவரது ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர்.இதற்க்கு காரணம் ஓவியா காதல்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாம் கண்டறிந்த விஷயம் மூன்று வகையிலான ஒருதலை காதல் கதைகள். இந்த மூன்று வகை காதல் கதைகள் எப்படி துவங்கும், எப்படி செயற்படும், இதன் முடிவுகள் எப்படி இருக்கும்…

வெளிப்படையாக தனது காதலை வெளிக் கூறிவிட்டு, எதிர்பாலின நபர் பதில் கூறும் வரை காத்திருப்பது அல்லது அவர்களை கவர தங்கள் சுட்டித் தனத்தை, திறமைகளை வெளிப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது முதல் வகை ஒருதலை காதல்.

இந்த வகைக் காதலில் தான் ஓவியா விழுந்தார்.

இந்த மாதிரியான ஒருதலை காதல் நாம் பல தமிழ் சினிமாக்களில், உலக சினிமாக்களில் பார்த்திருப்போம். இவர்கள் தாங்கள் காதலிக்கும் நபரை ஈர்க்க யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். தங்களால் முடிந்தவற்றை மட்டும் செய்துக் கொண்டு காதலுடன் காத்திருப்பர்.

இது போன்ற காதல் கதைகளின் முடிவு பெரும்பாலும் சுபமாக தான் இருக்கும். எத்தனை நாட்கள் தான் காத்திருக்க வைக்க முடியும். . ஒரு நாள் இறங்கி வந்து காதலை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு அதிகமாகத்தான் இருக்கும்.oviya aarav

அதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் தலைகீழாக நின்றாலும் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று ஆரவ் பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

ஓவியாவும் தற்போது ஆரவ்வை காதல் செய்வது போல் தெரியவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டாக இருந்தால் ஓவியா ஆரவ்வை காதல் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். ஆரவ் இவ்வாறு கூறியதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பு தெரிவித்துவருகிறார்கள்.