வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வாத்தியார் கொடுக்கும் விடுதலை பாஸ்.. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இதற்கு முந்தைய சீசன்களிலும் கமலின் வருகைக்காக பார்வையாளர்கள் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள்.

ஏனென்றால் அந்த இரு நாட்களும் சரவெடியாக இருக்கும். அதேபோல் விஜய் சேதுபதி கலக்குவாரா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் தற்போது உள்ளது. நாளை அவர் இந்த வாரம் நடந்த பிரச்சனை பஞ்சாயத்து அனைத்தையும் பேசி தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்பே அவர் பிக்பாஸ்க்கு ஒரு கண்டிஷன் போட்டு அதை சாதித்தும் இருக்கிறார். அதன்படி தற்போது வீட்டில் இருப்பவர்களுக்கு விடுதலை பாஸ் கொடுக்கப்பட இருக்கிறது. எப்படி என்றால் ஆண் பெண் இரு அணிகளும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவர்கள் வரும் வாரத்தில் நாமினேஷனில் இருந்து இந்த பாஸ் மூலம் தப்பித்து விடுவார்கள். ஆனால் இதில் யாருக்கும் பாவம் பார்க்கக்கூடாது நேர்மையான காரணங்களோடு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.

விஜய் சேதுபதி கொடுக்கப் போகும் பாஸ்

இதில் வெற்றி பெறும் இருவர் விஜய் சேதுபதி கையில் இருந்து அந்த பாசை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே குஷியான போட்டியாளர்கள் தற்போது தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டார்கள்.

அதன்படி சவுந்தர்யா எனக்கான அடையாளம் கிடைக்க பல வருடங்களாக போராடி வருகிறேன் என தன் தரப்பு வாதத்தை முன்வைக்கிறார். அதேபோல் தர்ஷா குப்தாவும் பேசுகிறார். ஒரு கட்டத்தில் அவருடைய வாதம் எடுபடாமல் போகவே வெளிநடப்பு செய்கிறார்.

எப்படி இருந்தாலும் என்னை தேர்ந்தெடுக்க மாட்டீங்க என கண்ணீரோடு பேசி அனுதாப ஓட்டை வாங்க முயற்சிக்கிறார். ஆனால் பெண்கள் அணிக்கு உள்ளே ஒரு கேங் இருக்கிறது. மெஜாரிட்டியை பொறுத்து அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்க படவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆண்கள் அணியை பொறுத்தவரையில் ரவீந்தர் பாசை வாங்குவதற்கு ஏதாவது ஒரு பிளான் போடலாம். இப்படியாக ஒவ்வொருவரும் தாங்கள் இதுவரை கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வாத்தியாரை இம்ப்ரஸ் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News