Muthukumaran: விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. மக்கள் ஆதரவுடன் முத்துக்குமரன் இந்த சீசன் டைட்டிலை பெற்றுள்ளார்.
இதற்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்தாலும் சில விமர்சனங்களும் வருகிறது. அதாவது அவர் மிடில் கிளாஸ் என்ற வார்த்தை பயன்படுத்தி தான் வெற்றி பெற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் அடிக்கடி இப்படி ஒரு அனுதாபத்தை காட்டி மக்களை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் என்ற விமர்சனம் தற்போது அதிகமாகி இருக்கிறது.
இதற்கு முத்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். மிடில் கிளாஸ் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியது ஓட்டுக்காக கிடையாது.
டைட்டில் வின்னர் கொடுத்த விளக்கம்
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என்பதற்காக தான். சிலர் திறமை இருந்தும் சூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு எனர்ஜியாக இருக்கும் என்பதால் தான் அந்த வார்த்தையை சொன்னேன். அது மட்டும் இன்றி மக்கள் இதற்காக எல்லாம் ஓட்டு போட மாட்டார்கள்.
திறமையும் உழைப்பும் இருக்க வேண்டும். ஒவ்வொருவரை பற்றி கேட்கும் போது அவர்கள் தாங்கள் யார் என்று சொல்வார்கள். அப்படி என்னை பற்றி கேட்கும் போது என்னுடைய ஊர், வளர்ந்த விதம் பற்றி கூறினேன்.
மத்தபடி மிடில் கிளாஸ் என்ற வார்த்தையை வைத்து ஓட்டு வாங்க வேண்டும் என்பது நோக்கம் கிடையாது என தெளிவுபடுத்தியுள்ளார்.