வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஒத்தையா ரெட்டையா போடும் பிக்பாஸ்.. இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் 2 பீஸ்

Biggboss 8: கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரஞ்சித் வெளியேறி இருந்தார். அதையடுத்து தற்போது 12 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

அதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. அதே போல் பைனல் வருவதற்கு மூன்று வாரங்கள் தான் இருக்கிறது.

அதனால் இந்த வாரம் இரண்டு பேரை வீட்டை விட்டு வெளியேற்ற பிக்பாஸ் டீம் முடிவு செய்து இருக்கிறது. அதில் ஆண்களிலிருந்து ஒருவரும் பெண்களிலிருந்து ஒருவரும் வெளியேற உள்ளனர்.

அதன்படி தற்போது ஜெஃப்ரி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அவருடைய எலிமினேஷன் சனிக்கிழமை எபிசோடில் பார்வையாளர்களுக்கு காட்டப்படும்.

ஒத்தையா ரெட்டையா போடும் பிக்பாஸ்

அதை அடுத்து பெண்களிலிருந்து இரண்டு பேரை பிக்பாஸ் டீம் தேர்ந்தெடுத்திருக்கிறது. பவித்ரா அன்சிதா இருவரில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.

இதற்கான பலத்த ஆலோசனையில் இன்று மதியம் வரை பிக்பாஸ் டீம் இருந்திருக்கின்றனர். இறுதியில் அன்சிதா வெளியேறுவது உறுதியாகியிருக்கிறது.

ஒரு விதத்தில் இது எதிர்பார்த்ததுதான். ஆனால் பவித்ராவை வெளியே அனுப்பி இருந்தால் நிச்சயம் ரசிகர்களின் எதிர்ப்புக்கு பிக்பாஸ் டீம் ஆளாகி இருக்கும்.

அந்த வகையில் இந்த வார எலிமினேஷன் எதிர்பார்த்ததுதான். மீதமிருக்கும் பத்து போட்டியாளர்களில் யார் டாப் 5ல் பிடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News