திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

நீ இன்னும் வளரனும் பாப்பா.. சாச்சனாவுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச், இந்த வாரம் தாக்குப் பிடிப்பாரா.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் குழந்தை பிள்ளைய அநியாயமா வெளிய துரத்தி விட்டுட்டீங்களே என ஆடியன்ஸ் சாச்சனாவுக்காக நீதி கேட்டனர். அதை அடுத்து எப்படியோ மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து விட்டார் விஜய் சேதுபதியின் ரீல் மகள்.

ஆனால் இதுக்கு பேசாமல் அவர் வராமலேயே இருந்திருக்கலாம் என்னும் அளவுக்கு சொதப்பி வருகிறார். நேற்றைய எபிசோடில் பெண்களில் மூன்று வீக்கான நபர்கள் இருக்கின்றனர் என ரவீந்தரிடம் அவர் பேசியது அம்பலமானது.

இதனால் சுனிதா அவர் மீது செம கடுப்பில் இருக்கிறார். இப்படி ஒரு விஷயம் நடக்கும் என தெரியாத சாச்சனா அந்த சமயத்தில் எப்படியோ சமாளித்தார். அதன் பிறகு பாப்பா சரியாக இருந்திருந்தால் பரவாயில்லை.

தற்போது அவர் எங்க அம்மா எனக்கு சாப்பாடு போடுவாங்க. ஆனா அப்பாவா நம்ப முடியாது என பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பெண்கள் அணியில் அவர் இது குறித்து விவாதித்தார்.

ஓவர் கான்ஃபிடன்ட் சாச்சனா

ஆனால் அவர் போன பிறகு ஜாக்குலின், சௌந்தர்யா இருவரும் இவ என்ன லூசா என்று ரீதியில் ரியாக்சன் கொடுத்தனர். அந்த அளவுக்கு அம்மணி நானும் கருத்து சொல்வேன் என தன்னையே டேமேஜ் செய்து கொண்டார்.

அதை அடுத்து இன்று நடந்த நாமினேஷனில் பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் நாமினேட் செய்ய வேண்டும். இதில் ஆண்கள் பெரும்பாலானோர் சாச்சனாவை தான் நாமினேட் செய்தனர்.

அதிலும் விஷால் வயசுக்கு மீறி அவர் பேசுகிறார் என கூறிய பாயிண்ட் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் கவனத்தை ஈர்க்கிறேன் என்ற பெயரில் அவர் மெச்சூரிட்டி இல்லாமல் இப்படி சில விஷயங்களை செய்வது பார்வையாளர்களை கடுப்பாக்கி வருகிறது.

இதனால் இவருக்கு இருந்த ஆதரவு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியிருக்கிறது. இனிவரும் நாட்களில் அவர் கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் தப்பிப்பார். இல்லையென்றால் இந்த வாரம் அவருக்கு ஆப்பு ரெடியாக இருக்கும்.

- Advertisement -spot_img

Trending News