வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பழிக்கு பழி வாங்கிய பாய்ஸ் டீம்.. ஜாக்லின் ஃபார்முலாவை பிடித்த தர்ஷா

Dharsha Gupta: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது வார முடிவில் இருக்கிறது. இந்த வாரம் 10 பேர் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். அதில் அர்னவ் வெளியேறுவார் என ஓட்டு நிலவரம் சொல்கிறது.

ஆனால் விஜய் டிவி ஏதாவது பிளான் வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தர்ஷா பெண்கள் டீமில் ஆண்கள் குறித்து புகார் செய்கிறார்.

இந்த வாரம் பெண்கள் அணியில் இருந்து தர்ஷா ஆண்கள் டீமுக்கு சென்றுள்ளார். போன வேகத்திலேயே அவர் ஒட்டுமொத்த ஆண்களையும் கதறவிட்டார். அதேபோல் சிறு சிறு சண்டைகளையும் மூட்டி விட்டு வேடிக்கை பார்த்தார்.

இப்படி செந்தில் ரேஞ்சுக்கு பதனி வேலை பார்த்த அவர் தற்போது கண்ணீர் விட்டு கதறுவது உண்மையா பொய்யா என நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது தர்ஷா செய்த சமையல் நல்லா இல்லை என பாய்ஸ் டீம் கிண்டல் செய்திருக்கிறது.

தர்ஷாவை கதறவிட்ட பாய்ஸ்

உன் சாப்பாட்டை சாப்பிட்டு எங்களுக்கு வாந்தி பேதி ஆய்டுச்சு என அவர்கள் கொஞ்சம் அலப்பறை கொடுத்ததில் பாவம் பாப்பா இப்போது அழுது கொண்டிருக்கிறது. நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வளவு நாள் இருந்துட்டு வந்து இருக்கேன்.

என் சமையல் நல்லா இல்லன்னு சொன்னா பாக்குற மக்கள் என்ன பத்தி என்ன நினைப்பாங்க என சிறு குழந்தை போல் புகார் வாசித்துக் கொண்டிருக்கிறார். வழக்கம்போல முத்து ஏம்மா அழுவுற அப்படி எல்லாம் இல்லை என பிரச்சனையை பெரிதாக்க முயற்சி செய்கிறார்.

இப்படி உப்பு சப்பில்லாத ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த ஆடியன்ஸ் தர்சாவுக்கு ஆதரவாக இருந்தாலும் பல பேர் ஓவரா சீன் போடாத என நக்கல் அடித்து வருகின்றனர். இப்படியாக ஜாக்குலின் ஆயுதமான கண்ணீரை அவர் கையில் எடுத்துள்ளார்.

- Advertisement -

Trending News