வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்துடுச்சு.. பெண்களை பழி தீர்க்கும் ஆண்கள், பிக்பாஸ் 8

Vijay Tv-Biggboss 8: இன்று காலையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்களின் ஆட்டம் ஓவராக தான் இருக்கிறது. இதை லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கும் ஆடியன்ஸ் பெண்களுக்கு சப்போர்ட் செய்து கமென்ட் கொடுத்து வருகின்றனர்.

அதிலும் ஜாக்குலின் சாச்சனா இருவரையும் சமைத்து பாத்திரமும் கழுவ வேண்டும் என சொன்னதும் அனைவரும் பொங்கிவிட்டனர். இதனால் இரு அணிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் முத்துவின் ஆட்டம் அதிகமாகவே இருக்கிறது. இந்த வாரம் சத்யா தான் கேப்டன் என்று பார்த்தால் அவரை டம்மியாக்கி விட்டு இவர்தான் ஓவராக அலப்பறை கொடுத்து வருகிறார்.

வார இறுதியில் இதற்கு அவர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். அதன்படி ஜாக்லின் கோட்டை தாண்டி ஆண்கள் அணிபக்கம் சென்றது தற்போது பிரச்சினையாகிவிட்டது. கிச்சனுக்கு வரவேண்டும் என்றால் பொறுப்பாளரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது ஆண்களின் வாதம்.

பிக்பாஸ் வீட்டுக்குள் ரணகளம் பண்ணும் ஆண்கள்

இங்கே யாரும் இல்லை அதனால் தான் வந்தேன் என ஜாக்குலின் விளக்கம் கொடுத்தார். அதற்கு முத்து ஓவராக பதிலளித்தது பார்ப்பவர்களுக்கு கடும் எரிச்சலை கொடுத்துள்ளது. மேலும் அர்னவ் ஒரு பக்கம் எங்க அனுமதி இல்லாமல் எங்க வீட்டுக்குள்ள வந்தா நடக்கிறதே வேற என மிரட்டும் படி பேசி உள்ளார்.

இதை பார்த்த போது அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்துடுச்சு என்ற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருகிறது. கடந்த வாரம் ஆண்கள் பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை என விஜய் சேதுபதி சொல்லி இருந்தார்.

அதற்காகவே தற்போது திட்டம் போட்டு அவர்கள் பெண்களை டார்கெட் செய்வது போல் தோன்றுகிறது. இதில் பெண்கள் அணியை பொறுத்த வரையில் ஜாக்குலின் மட்டுமே விளையாடுகிறார். மற்றவர்கள் எல்லாம் சாப்பிடுவதும் மேக்கப் செய்வதுமாக இருக்கின்றனர். இதை எல்லாம் இந்த வாரம் விஜய் சேதுபதி கேட்பாரா என்பதை பார்ப்போம்.

- Advertisement -

Trending News