Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss-5-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் முதல் 10 பேர் இவர்கள்தான்.. விஜய் டிவி வலையில் சிக்குவார்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனை தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாததால் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் போட்டியாளர்களும் சலிக்க வைக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான் இதுவரை வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே அதிகமான பார்வையாளர்களை பெற்ற சீசனாக இருந்தது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை போலவே கலகலப்பான ஒரு கூட்டத்தை எப்படியாவது தேடி கண்டு பிடித்து விட வேண்டும் என விஜய் டிவி நிறுவனம் வலைவீசி உள்ளதாம். அதற்காக பல சர்ச்சை பிரபலங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

biggboss5-cinemapettai

biggboss5-cinemapettai

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் அதன் பிறகு வாழ்க்கை நல்லபடியாக இருந்துள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது சினிமாவில் பலரும் நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது சிறு தவறு செய்தால் கூட தங்களுடைய கேரியரை பாதித்து விடும் என்பதையும் தெளிவாக உணர்ந்து பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இருந்தாலும் பிரபலங்களிடம் ஏதாவது கூறி மண்டையை கழுவி நிகழ்ச்சியில் வச்சு செய்துவிடுவார்கள் விஜய் டிவியினர். அந்த வகையில் தற்போது கிட்டத்தட்ட 10 பிரபலங்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும் கடைசி நேரத்தில் இவர்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது இருக்கக் கூடும். அவர்களின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • லட்சுமி ராமகிருஷ்ணன்
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா
  • கவர்ச்சிப் புயல் ஸ்ரீ ரெட்டி
  • குக் வித் கோமாளி அஸ்வின்
  • குக் வித் கோமாளி தர்ஷா குப்தா
  • ராதாரவி
  • குக் வித் கோமாளி பவித்ரா
  • பழ கருப்பையா
  • கவர்ச்சி கன்னி சோனா
  • விஜய் டிவி சீரியல் நடிகர் ஆசீம்
Continue Reading
To Top