Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss-5

Videos | வீடியோக்கள்

கல்யாணத்தில் ஆரம்பித்து சண்டையில் முடிந்த வீடு.. கலக்கும் பிக் பாஸ் சீசன் 5 முதல் வீடியோ

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ரசிகர்களுக்கு தெரிந்த பிரபலங்களை ஒரே வீட்டிற்குள் விட்டு அவர்களுக்குள் கலகம் மூட்டி பார்ப்பதற்கே செம என்டர்டைன்மென்ட் தான்.

முதல் மூன்று பிக் பாஸ் சீசன்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. ஆனால் கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சுத்தமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

போட்டியாளர்களும் ரசிக்கும்படி இல்லை, அதேபோல் கொடுக்கப்பட்ட விளையாட்டுகளும் யாரையும் கவரவில்லை. வெறும் காதல், சண்டையை மட்டுமே வைத்து போனமுறை வண்டியை ஓட்டி விட்டது விஜய் டிவி. ஆனால் முன்னர் கிடைத்த டிஆர்பி போனமுறை இல்லை என்பதே அவர்களின் கவலை.

அதனால் இந்த முறை போட்டியாளர்கள் முதல் புரோமோக்கள் வரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களை கவரும் விதத்தில் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது விஜய் டிவி நிறுவனம். மேலும் கமலஹாசனும் இந்த முறை தூய தமிழில் பேசுகிறேன் என வழவழ கொழகொழ என்று இருக்கப் போவதில்லையாம்.

தன்னுடைய பங்குக்கு இறங்கி அடிக்கப் போகிறாராம் உலகநாயகன் கமலஹாசன். அதுமுதல் புரோமோ வீடியோவிலேயே தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முதல் முறையாக ஒரு வித்தியாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டு மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5.

சந்தோசமான கல்யாணத்தில் ஆரம்பித்து பின்னர் சண்டையில் முடிந்த அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இந்த ஒரு வீடியோவே போதும், இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என்பதை காட்ட என ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top