Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே டாஸ்க்கில் வீட்டையே கண்ணீரில் மூழ்க வைத்த பிக் பாஸ்.. நீங்க வேற லெவல் ஜி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி தன்னுடைய சுவாரசியத்தை சற்றும் குறைக்காமல் நெட்டிசன்களுக்கு மக்களுக்கும் பெரும் தீனியாக அமைந்து வருகிறது.
மேலும் பிக் பாஸ் வீட்டினுள் அனுதினமும் கொடுக்கப்படும் டாஸ்க்குகளால் இந்த நிகழ்ச்சி கலை கட்டி வருகிறது.
அந்தவகையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் லெட்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கில் ஹவுஸ்மெட்டுகள் சரக்கும் நாய்க்கும் லெட்டர் எழுதியது பிக் பாஸ் வீட்டில் உள்ளவரை மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரையும் கலகலக்க வைத்தது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், தீபாவளியைப் பண்டிகையை முன்னிட்டு தாங்கள் மிஸ் செய்யும் நபருக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு டாஸ்கை கொடுத்தார் பிக் பாஸ்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் பேப்பரும் பேனாவுமாக தனித்தனியாக லெட்டர் எழுதத் தொடங்கினர். இந்த எபிசோடின் இறுதியாக ஹவுஸ் மெட்டுகளை அவர்களது கடிதங்களை படிக்குமாறு கூறினார் பிக் பாஸ்.
அதன்படி, சம்யுக்தா அவர் மகன் ரேயனுக்கும், அர்ச்சனா அவருடைய மகளுக்கும், பாலாஜி, ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோர் தங்களது அம்மாவுக்கும், ஜித்தன் ரமேஷ், ஆரி ஆகியோர் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் கடிதம் எழுதினர்.
ஆனால் இதுவரை யாரும் எழுதாத விதமாக சோமசேகர் மற்றும் ரியோ தங்களது சரக்கு பாட்டில்க்கும், நாய் குட்டிக்கும் லெட்டர் எழுதி சோகமாக இருந்த வீட்டை கலகலவென மாற்றினர்.
அதாவது சோமசேகர் தன்னுடைய நாய்க்குட்டிகாகவும், ரியோ ஆரம்பிக்கும்போதே ‘அன்புள்ள ஆல்கஹாலிக்கே..’ என ஆரம்பித்து பிக்பாஸ் வீட்டையே சிரிப்பால் தெறிக்க விட்டார்.
எனவே இந்த எபிசோடை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பலர், ‘தாறுமாறு தக்காளி சோறு’ என்று ரியோ மற்றும் சோம் ஆகியோருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
