Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் பாலாஜியின் ரகசியங்களை உடைத்த நெருக்கிய நண்பர்.. சாக்லேட் பாயின் பள்ளிப்பருவ வைரல் புகைப்படம்!
பிக்பாஸ் 4 வீட்டின் சாக்லேட் பாயாக சுற்றி திரிபவர் தான் பயில்வான் பாலாஜி. இவர் 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் ‘மிஸ்டர் பர்ஃபெக்ட் பாடி’ என்ற பட்டத்தையும், 2018 ஆம் ஆண்டு ‘மிஸ்டர் இந்தியா’ என்ற பட்டத்தையும் வென்றவர் ஆவார்.
மேலும் பாலாஜி, பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே ‘கடந்துவந்த பாதை’ என்ற டாஸ்கின் மூலம் தமிழ் மக்கள் பலரின் மனதை வென்றார்.
இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை பாலாஜி முருகதாஸின் ஃபேன்ஸ்கள் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
அதாவது கடந்த வந்த டாஸ்கில் பாலாஜி பேசியபோது அவருடைய தந்தையும் தாயும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும், நள்ளிரவில் அவருடைய அப்பா அவரை குடித்துவிட்டு அடித்துத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த தகவல் பொய்யானது என்றும், பாலாஜியால் அவரது தந்தை அப்செட்டில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இவ்வாறிருக்க தற்போது அதற்கு எதிர்மாறாக பாலாஜி கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்தார் என்று நம்பத்தகுந்த அவருடைய உறவினர் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பாலாஜி கண்டிப்பாக பிக் பாஸ் சீசன் 4- இன் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்புள்ளது என பிக்பாஸ் ரசிகர்களின் மனதில் தோன்ற ஆரம்பித்துள்ளது.
மேலும் இதனை அறிந்த பாலாஜி முருகதாஸின் ரசிகர்கள் ‘இவர போய் தப்பா நினைச்சுடோமே’ என்று வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

balaji-murugadass
