Tamil Cinema News | சினிமா செய்திகள்
24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த மூன்று சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனை உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த போட்டியில் கலந்து கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் சிலருக்கு நல்ல எதிர்காலம் அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. சிலர் மக்களிடையே ஆதரவைப் பெற்றும், சிலர் மக்களின் வெறுப்புகளையும் சம்பாதித்துள்ளனர்.
அதேபோல் கடந்த பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் தான் மீரா மிதுன். தொடக்கம் முதலே மக்களிடமிருந்து வெறுப்புகளை சம்பாதித்த இவர், ஒரு கட்டத்தில் சக போட்டியாளரான வனிதாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அதேபோல் தன்னை தவறாக தொட்டதாக நடிகர் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தினார். இதனால் உச்சகட்ட கோபத்தில் இருந்த மக்கள் அந்த வாரமே அவரை வெளியேற்றினர்.
வெளியே வந்த இவருக்கு இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கைநழுவிப் போய்விட்டது. இதனால் தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார். சமீபத்தில் பீர் பாட்டிலுடன் இவர் கொடுத்த போஸ் மிகவும் வைரலாகி வருகிறது. இதில் எகத்தாளமாக தமிழ் பொண்ணு நா சரக்கடிக்க கூடாதா என்ன! என்று திமிர்த்தனம் காட்டி வருகிறார்.
