Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரம்புமீறும் பிக்பாஸ்.! லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.!

விஜய் டிவியில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தொடங்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது, இந்த நிலையில் தினமும் பிக்பாஸ்-2 வீட்டில் ஏதாவது பிரச்சனை நடந்துகொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று வந்திருக்கும் பிக்பாஸ்-2 ப்ரோமோ வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது இன்று நடக்க இருக்கும் எப்பிசோடில் கிறுக்குத்தனமான டாஸ்க் இருக்கிறது போல் தெரிகிறது, ஆமா இரண்டு நடிகைகள் லிப் லாக் அடிப்பது போல் ப்ரோமோ வந்துள்ளது இதை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
மேலும் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் கொஞ்சுவது போல் இந்த ப்ரோமோவில் வந்துள்ளது இதை பார்த்தால் இருவரும் இணைந்துவிட்டார்களா என பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்த்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் இப்படி ஒரு டாஸ்க் வைத்து காட்சியாக்கபட்டு ப்ரோமோவில் வெளியிட்டிருப்பது பார்ப்பவர்களை அதிர்ச்சியாகியுள்ளது.
