fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா?

தமிழ் தொலைக்காட்சியில் அதிக எதிர்பார்ப்பை எகிறடித்து இருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ப்ரோமோவில் நடித்துள்ள பெண் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெள்ளித்திரையில் முத்திரை பதித்த உலக நாயகன் கமல்ஹாசன், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. இந்தியில் 10 சீசன்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் முதன்முறையாக விஜய் டிவியில் அந்த ஷோ ஒளிபரப்பானது.

15-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில், எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் இருப்பது போன்ற கான்சப்டுடன் வடிவமைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, சின்னத்திரை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 100 நாட்கள், 60 கேமிராக்கள், ஒரே வீட்டில் 15 பிரபலங்கள் என்பதுதான் நிகழ்ச்சியின் மையக்கரு. கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, கஞ்சா கருப்பு, சக்தி, காயத்ரி ரகுராம், ஹாரத்தி என பிரபலங்கள் வரிசைகட்டினாலும், பிக்பாஸ் முதல் சீசன் டைட்டிலை ஆரவ் தட்டிச் சென்றார். முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசனுக்கான வேலைகளில் சேனல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது, பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெறப்போகும் பிரபலங்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், நல்லவர் யார்; கெட்டவர் யார் என்கிற பெயரில் பிக்பாஸ் சீசன் – 2வின் இரண்டாவது டீசர் சோசியல் மீடியாக்களில் ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது. கையில் பழங்கள் அடங்கிய பையுடன் வரும் இளம் பெண் ஒருவரை இடித்துத் தள்ளி விட்டு இளைஞர் ஒருவர் ஓடுவது போல் அந்த டீசர் தொடங்குகிறது.

அந்த பிரேமை ஃப்ரீஸ் செய்து காட்சிக்குள் நுழையும் கமல், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பது நமது பார்வையில்தான் இருக்கிறது என்று பேசத் தொடங்குகிறார். அத்துடன் காற்றில் ஃபீரீஸாகி நிற்கும் பழங்களில் இருந்து ஆப்பிளை மட்டும் எடுத்துக் கொண்டு செல்கிறார். பின்னர், காட்சிகள் தொடர, வேகமாக வரும் காரில் அடிபட்டு விடாமல் ஒரு சிறுவனைக் காப்பாற்றவே அந்த இளைஞர், பெண்ணின் கையில் இருந்த பையைக் கூட கவனிக்காமல் வேகமாகச் சென்றிருப்பது தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அக்மார்க் வசனத்துடன் அந்த டீசர் முடிகிறது.
டீசர் ஹிட்டடித்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த அந்த பெண் யார் என்பது தெரியவில்லை.

புதுமுக நடிகையாக இருக்குமோ என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பழங்கள் அடங்கிய பையுடன் அந்த டீசரில் வரும் இளம்பெண் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மங்காத்தா படத்தில் அஜித்துடன் மும்பை போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த அஸ்வினின் மனைவிதான் அவர் என்பது தெரியவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் டீசர் ஷூட்டிங்கின் போது கமலுடன் அஸ்வின் மற்றும் அவரது மனைவி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top