Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2விற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் டிஆர்பி குறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்தி ரசிகர்களுக்கு பரிச்சயமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது. லவ், மருத்துவ முத்தம், சேறி, கால்சியம் உள்ளிட்ட வார்த்தைகள் இன்னும் ரசிகர்களிடம் செம வைரல் என்பதே அதன் சக்சஸை ஈஸியாக சொல்லி விட முடியும். இதன் முதல் பாகம் முடிவடைந்த மறு நாளில் இருந்தே அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக இரண்டாவது சீசன் அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த ஞாயிறு முதல் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசனில் வீட்டிலேயே பல புதுமைகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஜெயில் வேறு அமைத்து இருந்ததால், ஏகப்பட்ட ஆசையுடன் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
போட்டியாளர்களாக மும்தாஜ், யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், ஆனந்த் வைத்தியநாதன், செண்ட்ராயன், டேனியல் போப், மமதி சாரி, தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யா பாலாஜி உள்ளிட்ட 16 பேர் வீட்டுக்குள் சென்றனர். என்னவோ முதல் சீசனுக்கு இருந்த வரவேற்பு, இரண்டாவது சீசன் போட்டியாளர்களுக்கு கிடைக்கவில்லை. சரி போக போக எல்லாம் சரியாகும் என நினைத்தனர் ரசிகர்கள். ஆனால், மூன்று நாள் நிகழ்ச்சி கடந்து விட்ட பிறகும் உப்பு சப்பிலாமல் சென்று கொண்டு இருப்பது. ரசிகர்களிடம் செம அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
கடந்த சீசனின் முதல் வாரமே சலசலப்புகள் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த சீசனில் பலர் பேசுவதே புரியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனால், டிஆர்பியும் கடந்த சீசன் அளவுக்கு இல்லை என்பதால் தொலைக்காட்சி தரப்பு கடும் அப்ஸட்டாகி இருக்கிறதாம். அதனால், விரைவில் இந்நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற சில அதிரிபுதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
