.விஜய் டி.வி. கடந்த ஜுன் மாதம் 25ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியை துவக்கியது. ஏற்கனவே வெளிநாடுகளிலும் வட மாநிலங்களில் பிரபலமாகி வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சியை முதன் முறையாக தமிழில் விஜய் டி.வி நடத்தியது.

இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்பவர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய விதி.

இந்த நிகழ்ச்சியின் போது வாரம் ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள்.தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகர் ஸ்ரீ, நடிகை அனுயா, காமெடி நடிகர் வையாபுரி, சினிமா நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், காமெடி நடிகர் பரணி, மாடலிங் நடிகை ரைசா, சினிமா பாடலாசிரியர் சினேகன், நடிகை ஓவியா, காமெடி நடிகை ஹார்த்தி, மாடலிங் நடிகர் ஆரவ், காமெடி நடிகர் கஞ்சாகருப்பு, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு புகழ்பெற்ற ஜுலி, நடிகர் கணேஷ் வெங்கட்ராம் , நடிகர் சக்தி, நடிகை நமிதா ஆகிய 15 பேர் கலந்து கொண்டனர்

இவர்களில் வெற்றியாளரை தேர்ந்தேடுக்கும் பைனல் நிகழ்ச்சி  நடந்தது. இந்த நிகழ்ச்சி தமிழக மக்களால் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளானது. பைனல் நிகழ்ச்சியின் துவக்கத்தில் பழைய போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்தனர்.

இறுதியில் மக்களின் ஓட்டுக்கள் முலம் வெற்றியாளராக மாடலிங் நடிகர் ஆரவ் தேர்வு செய்யப்படதாக அறிவிக்கப்பட்டது.சுமார் 100நாட்கள் நடந்த இந்த பிக்பாஸ் போட்டியை சுமார் 6.5 கோடிமக்கள் பார்வையிட்டதாகவும், மொத்தம் 70 கோடிக்கும் மேலான வாக்குகள் பொதுமக்களால் அளிக்கப்பட்டதாகவும்.

நடிகர் கமல் அறிவித்தார். வெற்றியாளரை அறிவிக்கும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் வழக்கும் தன் பாணியில் தனது அரசியல் பிரவேசம் குறித்து நாசுக்காக பேசினார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நன்மைகள் இருவருக்கு நடந்துள்ளது. ஒன்று கமலுக்கு அரசியல் வாய்ப்பு மற்றும் ‘இந்தியன் 2’ பட வாய்ப்பு.

மற்றொன்று பொதுமக்களில் பெரும்பாலானோர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்த ஆரவ்வுக்கு சாம்பியன் பட்டம்இந்த நிலையில் மிக விரைவில் பிக்பாஸ் 2 ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் சூர்யா தரப்பினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர். சூர்யா தற்போது பிசியாக தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்போதைக்கு அவரது கவனம் முழுவதும் திரைப்படத்துறையில் தான் உள்ளது. எனவே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நடிகர் அரவிந்த் சாமி பிக்பாஸ் சீசன் 2-வை தொகுத்து வழங்குவார் என கூறுகிறார்கள். இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீசன்:2 மட்டுமல்லாது அரவிந்த் சுவாமியை 3 வருடங்களுக்கு குத்தகை எடுக்க திட்டமிட்டுள்ளதாம் பிக்பாஸ் தயாரிப்பு குழு