சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இந்த வாரம் வெளியே போகும் பிக் பாஸின் திருஷ்டி பொம்மை.. செண்டிமெண்ட் டிராமாவுக்கு ஆப்பு வைத்த குருநாதர்

Vijay tv Bigg boss 8: பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இப்பொழுது வரை போட்டியாளர்களிடம் சுவாரஸ்யம் என்பது கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறது. அதனால் பிக் பாஸின் குருநாதர், அடிக்கடி டாஸ்க் மற்றும் போட்டிகளை கொடுத்து விறுவிறுப்பாக கொடுக்க முயற்சி எடுத்து வருகிறார். ஆனாலும் தினமும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் அளவிற்கு செண்டிமெண்டாக பேசி பெண் அணியில் இருப்பவர்கள் சீரியலில் நடித்தது போல் டிராமா பண்ணுகிறார்கள்.

அந்த வகையில் ஓரளவுக்கு ஆண்கள் அணியில் இருப்பவர்கள் தான் பிக் பாஸ்க்கு ஏற்ற மாதிரி விளையாண்டு தந்திரமாக காய் நகர்த்தி வருகிறார்கள் என்பது போல் தெரிகிறது. இதில் முத்துக்குமார் என்பவர் புத்திசாலித்தனமாகவும் எந்த மாதிரி காய் நகரத்தினால் யார் கீழே விழுவார் என்று சதுரங்க விளையாட்டை பக்காவாக நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இரண்டாவது வாரத்தில் கேப்டனாக சத்யா இருந்தாலும் முத்துக்குமார் தான் ராஜ்ஜியம் செய்து வருகிறார். அதன்படி அங்கிருக்கும் சிப்பாய்கள் பணிவிடை பண்ணுகிறார்கள். ஆனால் இதில் திருஷ்டி பொம்மை என்று சொல்லும் அளவிற்கு ஆண்கள் அணியில் இருக்கும் போட்டியாளரான அர்னவ் ஒரு பக்கம் சச்சினாவிடம் அண்ணன் செண்டிமெண்டில் உருகி தன்னிடம் இருந்த ட்ராஃபியை சச்சினாவிடம் கொடுத்துவிட்டார்.

ஒரு பக்கம் அண்ணன் செண்டிமெண்ட் இன்னொரு பக்கம் அக்ஷிதாவுடன் காதல் லீலைகளை மறைக்கும் விதமாக சொம்பு தூக்கி என்ற அவார்டை கொடுத்து மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்திருக்கிறார். ஆனாலும் என்ன பண்ணினாலும் உங்க ஜம்பம் எங்களிடம் பலிக்காது என்பதற்கு ஏற்ப மக்கள் அர்னவ் விஷயத்தில் உஷாராக இருக்கிறார்கள்.

ஏனென்றால் வெளியே செய்த காரியம் அப்படி, அதனாலேயே எப்பொழுது எங்களிடம் சிக்குவார், நாங்கள் வச்சு செய்ய காத்துக் கொண்டிருக்கும் என்று இருந்த மக்களுக்கு இந்த வாரம் கிடைத்த ஒரு துருப்புச் சீட்டு தான் அர்னவ் நாமினேஷன். அந்த வகையில் பிக் பாஸ் இன் திருஷ்டி பொம்மையாக இருக்கும் அர்னவ்-வை இந்த வாரம் வெளியே அனுப்ப வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து மற்ற போட்டியாளருக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.

அதன்படி இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் 10 போட்டியாளர்களில் முதல் இரண்டு இடத்தை பிடித்திருப்பது விஜே விஷால், சௌந்தர்யா. அதே மாதிரி கம்மியான ஓட்டுகளை பெற்றிருப்பது சச்சினா, அர்னவ். அந்த வகையில் இந்த வாரம் அர்னவ், பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி போகப் போகிறார்.

- Advertisement -

Trending News