செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

வைல்டு கார்டு போட்டியாளரை பலி கொடுக்கும் பிக் பாஸ்.. சாச்சானாவை காப்பாற்ற காதல் ஜோடியை பிரித்த குருநாதர்

Bigg Boss 8 Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் ஆறாவது போட்டியாளர்களாக வெளியேறப் போவது இவர்தான் என்று ஓரளவுக்கு மக்களின் ஓட்டு படி யூகிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் போட்டியாளரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிக்பாஸின் குருநாதர் வைல்டு கார்டு மூலம் போன போட்டியாளரை பலி கொடுக்க துணிந்து விட்டார். அதாவது கடந்த சில வாரங்களாக சாச்சானா பண்ணும் அளப்பறையை தாங்க முடியவில்லை. அந்த வகையில் மற்ற டம்மி பீசுகளை வச்சு செய்யலாம், முதலில் இந்த வாரம் சாச்சானாவை வெளியே அனுப்ப வேண்டும் என்று கட்டம் தீட்டினார்கள்.

அதன்படி கம்மியான ஓட்டுக்களிலும் சாச்சானா தான் இருந்தார். ஆனால் தற்போது வந்த தகவலின் படி இவரை பாதுகாக்கும் முயற்சியில் இவருக்கு பதிலாக அருண் மீது க்ரஷ்ஷாக இருந்த வர்ஷினியை பிரிக்கும் விதமாக இந்த வாரம் பிக் பாஸ் விட்டு விட்டு வெளியேறப் போகிறார்.

அத்துடன் வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்புனதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதற்கு ஏற்ப முதலில் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு பழைய போட்டியாளர்களை வெளியே அனுப்பலாம் என்பதற்காக தான். அதன்படி கடந்த வாரம் ரியா, இந்த வாரம் வர்ஷினி, அடுத்த வாரம் சிவக்குமார், ரயான் மற்றும் ராணவ் என வரிசையாக இவர்களை அனுப்பிவிட்டு தான் பழைய போட்டியாளர்கள் வெளியே வருவார்கள் போல. அதுவரைக்கும் இவர்கள்தான் பிக் பாஸ்க்கு பலியாடு.

- Advertisement -

Trending News