புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

களை கட்டிய டபுள் எவிக்சன்.. உறுதியாக அந்த ரெண்டு வேஸ்ட் பீஸ்களை தூக்கி வெளியில் போடும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த டபுள் எக்விக்சன் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. ரொம்பவும் போராக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி எப்போது முடியும் என்று ரசிகர்கள் நொந்து போயிருந்த வேளையில் இந்த வார எவிக்ஷன் அவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருக்கிறது.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமலும், ஓவர் அட்ராசிட்டி செய்யும் சில நபர்களும் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் அடுத்தடுத்து வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த இரண்டு நபர்கள் வீட்டை விட்டு வெளியேற இருக்கின்றனர்.

Also read: ஜனனி கன்னத்தை ஆசையாக கிள்ளிய போட்டியாளர்.. பிக்பாஸுக்கு கிடைத்த அடுத்த கன்டென்ட்

அந்த வகையில் இந்த வாரம் அசீம், ஜனனி, ஆயிஷா, கதிரவன், ஏடிகே, ராம் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர். அதில் அசீம் வழக்கம் போல அதிக ஓட்டுகளை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஜனனி, கதிரவன், ஏ டி கே ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். அதில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் குறைந்த ஓட்டுகளை பிடித்து கடைசி இரண்டு இடத்தில் இருக்கின்றனர்.

அதனால் இந்த வாரம் இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கின்றனர். அதில் ராம் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்களாக மிச்சர் போட்டியாளராக இருந்தவர் இவர் மட்டும்தான். பல நாட்கள் இவர் வீட்டில் இருக்கிறாரா என்பதே யாருக்கும் தெரியவில்லை.

Also read: அசீமை படுகேவலமாக திட்டிய ஆண்டவர்.. காரசாரமான பிக்பாஸ் மேடை

அந்த அளவுக்கு அத்தனை கேமரா இருந்தும் எதிலும் சிக்காமல் இருந்த இவர் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளராக இருந்தார். ஆனால் இந்த வாரம் ரகுவரன் கெட்டப் போட்டிருந்த ராம் தன்னால் முயன்ற அளவுக்கு பர்பாமன்ஸ் செய்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த வகையில் வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் ஏதோ வாங்கிய சம்பளத்திற்கு இந்த ஒரு பர்பாமென்சை அவர் சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக எந்நேரமும் ஏதாவது ஒரு மன அழுத்தத்தில் இருக்கும் ஆயிஷா வீட்டை விட்டு வெளியேறுவது ஒரு வகையில் நல்லது தான். மேலும் இவர்கள் இருவரும் வெளியேறுவதால் நிகழ்ச்சியில் எந்த விதமான பின்னடைவும் ஏற்பட போவதில்லை. அந்த வகையில் இந்த எலிமினேஷன் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது.

Also read: ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

- Advertisement -

Trending News