fbpx
Connect with us

Cinemapettai

கண்டிப்பா இவர்தான் பிக்பாஸ் 3 வின்னர்.. காஜல் அடித்து சொல்வது இவரைத்தான்

kaajal pasupathi

News | செய்திகள்

கண்டிப்பா இவர்தான் பிக்பாஸ் 3 வின்னர்.. காஜல் அடித்து சொல்வது இவரைத்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட காஜல் பசுபதி டைட்டில் வின்னர் யார் என்பதை கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் வனிதா, சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்தியா போன்ற பலர் வெளியேற்றப்படும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி பிக் பாஸில் நடப்பதைப் பற்றி கூறியுள்ளார்.

பிக் பாஸ் பிரச்சனை வருவதற்கு காரணம் வனிதாத்தான் அவரிடமிருந்து போட்டியாளர்கள் விலகினாள் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையே வராது என தெரிவித்துள்ளார். மேலும் லொஸ்லியா தனியாக திட்டமிட்டு விளையாடி வருகிறார், அதுதான் ஏன் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் லொஸ்லியா, சாண்டி, தர்ஷன் மூவரும் பிரச்சினை நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறாமல் பிரச்சினைக்கான தீர்வையும் அனைவரின் முன்னிலையில் பேசி வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் ஆல் இன் ஆல் அழகு ராணி லொஸ்லியாதான், ஆனால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை சாண்டிதான் பெறுவார் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top