fbpx
Connect with us

Cinemapettai

சித்தப்பு சரவணன் மன்னிப்பு கேட்டும் நேரடியாக வெளியேற்றிய பிக் பாஸ்.! காரணம் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்தப்பு சரவணன் மன்னிப்பு கேட்டும் நேரடியாக வெளியேற்றிய பிக் பாஸ்.! காரணம் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் இந்தவார நாமினேஷனில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், நேற்றைய தினத்தில் உடனடியாக சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இதற்கு பிக் பாஸ் என்ன காரணம் கூறுகிறார் என்றால், கல்லூரிப் பருவத்தில் தான் பெண்களை உரசுவதற்க்குத்தான் பஸ்ஸில் ஏறி செல்வோம் என்று அவர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று அவர் வெளியேற்றப்பட்டது இதுவரை போட்டியாளர்களுக்கு தெரியவரவில்லை.  ஏனென்றால் டிஸ்கஷன் ரூமில் வைத்து பிக்பாஸ் இடம் மன்னிப்பு கேட்டும், அக்குழுவினர்  மறுத்துவிட்டனர் ஏனென்றால் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் தவறான, அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை பிக்பாஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்பதுதான்.

இவர் செய்தது தவறு என்றால் மக்கள் போன வாரம்  எலிமினேஷனில் அவரை வெளியிட்டிருக்கலாம். ஆனால் மக்கள் இதனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் சமூக அக்கறை கொண்டு விஜய் டிவி செய்த இந்தச் செயல் வரவேற்கத்தக்கது மற்றும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top