Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸில் வெளியேறிய கவின் நேராக எங்கு சென்றார் தெரியுமா? நினைத்ததை சாதித்தாரா?
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்ட கவின் இந்த வாரத்தில் 5 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு வெளியேறினார். இவர் வெளியேறியது பார்த்து போட்டியாளர்கள் கண் கலங்கி நின்றனர்.
ஆனால் வெளியே ரசிகர்கள் இவரை ஓட்டுப்போட்டு காப்பாற்றி வந்தது அனைத்தும் வீணாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்த பின் தனது அம்மா ராஜலட்சுமியை பார்ப்பதற்காக சிறைச்சாலை சென்றுள்ளார்.
ராஜலட்சுமி தவணை சீட்டு போட்டு ஏமாற்றிவிட்டதாக 5 ஆண்டு சிறை தண்டனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கவின் இந்த செய்தியை தெரிய வந்து தனது அம்மா மற்றும் பாட்டி ஜாமினில் எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சீட்டு போட்டு ஏமாற்றப்பட்ட அனைவருக்கும் பணத்தை திருப்பி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதனால் மீண்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
அவர் பிக்பாஸ் வீட்டினுள் வந்ததும் மற்றும் 5 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வெளியேறியதும் இந்த ஒரு காரணத்திற்காக தான் என்பது நிதர்சனமான உண்மை ஆகி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் லாஸ்லியாவை காதல் திருமணம் செய்து கொள்வாரா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
