Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டிற்கு வரும் சூர்யா நடிகை.! யார் தெரியுமா? செம ஷாக்
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 3 கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இவர் இந்த வாரத்தில் தான் மீசை எடுத்ததற்கான காரணத்தை கூறும்போது, இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கிறான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
தமிழ் பிக் பாஸ் போலவே தெலுங்கு பிக் பாஸில் நாகார்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இவர் நடித்து வெளிவர இருக்கும் மன்மதடூ 2 படம் 9ம் தேதி வெளிவர உள்ளது.
இப் படத்தின் புரமோஷனுக்காக ராகுல் ப்ரீத்தி சிங் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக செல்ல இருக்கிறாராம். இதற்கான புரமோஷன் வீடியோ விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று தமிழில் இந்தியன்-2 படத்தில் ஒரு நடிகையாக வரும் ராகுல் ப்ரீத்தி சிங் தமிழ் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாம்.
கமலஹாசன் படம் என்பதால் இந்த 100 நாட்களுக்குள் ரகுல் ப்ரீத்தி சிங் கண்டிப்பாக பிக் பாஸ் இன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் படுவார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
