சரவணனை அசிங்கப்படுத்திய சேரன்.! மனம் உருகி சரவணன் கூறிய விளக்கம்.. பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல  நிகழ்ச்சியான பிக் பாஸில் நேற்று சரவணன் மற்றும் சேரனின் இடையில் பெரும் வாக்குவாதம் நிலவியது. இதனால் பிக் பாஸ் டாஸ்க் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்தது. பிக் பாஸ் வீட்டில் அனைவரும் நடிகர்கள் வேடம் போட்டனர், அதில் சரவணன் சரியாக விஜயகாந்த் கேரக்டரை செய்யவில்லை என்பதுதான் சேரனின் பதிவு.

ஆனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி போய் சண்டையில் முடிந்தது. சிறிது நேரம் கழித்து சரவணன் போட்டியாளர்களிடம் கூறியது என்னவென்றால் ஒரு நாள் இரவு சேரனை  சந்தித்து தற்போது தனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றும் வாய்ப்பளிக்குமாறு கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால், நீங்கதான் தமிழ் சினிமாவில் நடிக்காத டைரக்டர்கள் இல்லை ஒரு சுற்று வந்து விட்டீர்கள் அல்லவா என்று கூறினார். ஆகையால் பெரும் மன வருத்தத்துடன் அங்கிருந்து சென்றதாக சரவணன் கூறினார். இதனுடைய பாதிப்பு தான் இப்போது வரை சரவணனுக்கும் இயக்குனர் சேரனுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறதாம்.

இது மட்டுமல்லாமல் நடிகர் சரவணன் ஒரு காலத்தில் நல்ல பட வாய்ப்புகள் இருக்கும்போது சேரன் அவரிடம் வேலை பார்த்தது உண்டாம். வாய்ப்பு இல்லை என்றால் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால் இதுபோன்று அவர் பேசியது மிகவும் மனம் புண்பட்டு விட்டதாக கூறினார் சரவணன்.

இன்று கமலஹாசனுடன் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment