fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் சுஜாவால், அவர் தங்கைக்கு ஏற்பட்ட பிரச்சனை. இப்படியுமா நடக்கும் ?

News | செய்திகள்

பிக் பாஸ் சுஜாவால், அவர் தங்கைக்கு ஏற்பட்ட பிரச்சனை. இப்படியுமா நடக்கும் ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 52 ஆம் நாள் உள்ளே நுழைந்தவர் தான்  சுஜா வருணீ . பிக் பாஸ் வீட்டில் இவர் நுழையும் பொழுது  உங்களின்  மனநிலை என்ன என்பதை பிக்பாஸ் கேட்டறிந்தார்.மனம் விட்டு பேசிய சுஜா, ‘நான் பல வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா தான் இருந்தேன். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. தங்கை தைரியமானவள்.’ என்று தன் குடும்பம் பற்றி கூறினார்.

‘வாய்ப்புகள் அதிகம் இல்லாத  ஒரு சமயத்தில் தான் எனக்கு வர்ணஜாலம் படத்தில் ஆட வாய்ப்பு வந்தது.தொடர்ந்து அப்படியே வாய்ப்பு வர நானும் பாடல்களுக்கு மட்டும் ஆடினேன்; சில காலத்திற்கு பின் தான் தெரிந்தது தான் தவறாக காட்டப்படுகிறோம் என்று. பின் அப்படி ஆடுவதை நிறுத்தி விட்டேன். அப்படி ஆடுபவர்களை ஐட்டம் டான்ஸர்கள் என்கிறார்கள்.இது மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர்கள் தப்பானவர்கள் அல்ல. அவர்களுக்கும் கண்ணியம் உள்ளது. யாரும் இனி அப்படி ஐட்டம் என சொல்லாதீர்கள்’ என அவர் கூறினார்.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சுஜா இருக்கும் போது, சமூகவலைத்தளத்தில் பலரும் அவர் ஓவியாவை இமிடேட் செய்கிறார் என்று கூறிவந்தார்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து சுஜா வெளியேறிய நிலையிலும் அதே கருத்தைத் தெரிவித்து அவரை சாடி வந்தார்கள்.

பிஸியாக மாறிய சுஜா:

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில நல்ல ப்ரொஜெக்ட்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் தற்ப்பொழுது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாகவும் இருக்கிறார்.

பிறந்த நாள் வாழ்த்து:

இவர் தன்னுடைய பேஸ் புக், மற்றும் ட்விட்டர் கணக்கில் தன் தங்கையுடன் இருக்கும் போட்டோ ஒன்றை அப்லோட் செய்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தார். நெட்டிசன்களும் தன் பங்கிற்கு ரீ ட்வீட், மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒரு சிலரோ இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் இட ஆரம்பித்தனர். சிலர் அவரின் தங்கையை தவறாக விமர்சனம் செய்துள்ளனர்.வேற சிலரோ உனக்கு எப்படி தங்கை, அவள் அப்பா யார் என்றெல்லாம் சாட ஆரம்பித்தனர் .இந்நிகழ்வே அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்திருக்கிறது.

சுஜாவின் உருக்கமான வேண்டுகோள் :

பிரபல இணையதளத்திற்கு சுஜா பேட்டி கொடுத்தார். அப்பொழுது இந்தச் சம்பத்திற்க்கு தன்னுடைய பதிலை அவர் அளித்தார் “நான் என் தங்கைக்கு வாழ்த்து தான் சொன்னேன். உங்களுக்கு பிடித்திருந்தால் விஸ் பண்ணலாம். ரீட்வீட் பண்ணலாம். ஆனால் நான்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து என் தங்கையை தரக்குறைவாக  விமர்சனம் செய்வது தவறு. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. எனக்கு உங்கள் அளவிற்கு சரியாக தமிழ் வரவில்லை. தந்தை எங்களை விட்டுவிட்டு போய்விட்டார் என்பதற்கு மாறாக ‘என்னை விட்டுவிட்டு’ என மாற்றி சொல்லியிருக்கிறேன். அது தவறு தான். அதற்காக நீங்கள் தவறாக விமர்சனம் செய்த்து என்னை வருத்தப்பட வைத்துள்ளது.

பெண்களின் உடல் உறுப்புகளை  ரசிக்கத் தெரிந்த நீங்கள் அவர்களை தயவு செய்து இழிவுபடுத்தாதீர்கள். நீங்கள் தான் பெண்களை காக்க வேண்டும். டைனோசரை அழித்தது போல பெண்களை யும் அழித்து விடாதீர்கள். யாரையும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் தப்பாக பேசாதீர்கள். என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக பாருங்க, அப்படியில்லையா தண்ணி தெளிச்சு விட்டுடுங்க, ஆனால் கேவலப்படுத்தாதீங்க. கெஞ்சிக் கேட்டுக்கிரேன்” என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top