Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது தொடங்குகிறது தெரியுமா.? இதோ தேதி அறிவிப்பு
Published on

விஜய் டிவி-யில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வருடம் 3வது சீசன் தொடங்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை ஆனால் promo வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்கள், இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது துவங்கும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது, பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் ஜூன் 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது, இதன் முதல் சீசன் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதியிலும் இரண்டாவது சீசன் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதியும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
