புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

குக் வித் கோமாளி போல தான் பிக் பாஸ் சீசன் 8.. டம்மி போட்டியாளர்களை தேர்வு செய்த விஜய் டிவி, தினரும் விஜய் சேதுபதி

Vijay Tv Bigg Boss 8 Tamil: விஜய் டிவிக்கு என்னதான் ஆச்சு, கொஞ்ச நாள் நேரமே சரியில்லை என்று சொல்வதற்கு ஏற்ப தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவி தான் என்று மக்கள் இடத்தில் பெயர் பெற்றது. ஆனால் தற்போது எல்லா பெயரையும் கெடுக்கும் விதமாக விஜய் டிவிக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள் போல, தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

ஏற்கனவே சமீபத்தில் முடிந்து போன குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துகளும், வாக்குவாதங்களும் ஏற்பட்டது. அதில் விஜய் டிவி கண்மூடித்தனமாக பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்ததால் விஜய் டிவி மீது இருந்த பெயர் மக்களிடம் ரொம்பவே அடிவாங்கி விட்டது.

இதனைத் தொடர்ந்து எப்படியாவது பிக் பாஸ் சீசன் 8 மூலம் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்று பிளான் பண்ணி விஜய் சேதுபதியை கொண்டு வந்தது. விஜய் சேதுபதியும் அவர் பங்குக்கு என்ன முடியுமோ, அதுதான் செய்து கொண்டு வருகிறார். ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வச்சு ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப இவர்கள் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு டம்மி பீஸ்களாக தான் இருக்கிறார்கள்.

அவர்களுடைய விளையாட்டு டம்மியாகத்தான் இருக்கிறது, டாஸ்கும் புஸ்வானமாகத்தான் இருக்கிறது. இதனால் சுவாரசியமே இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இதை எப்படி சுவாரஸ்யமாக வேண்டும் என்பது தெரியாமல் விஜய் சேதுபதியும் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களை வறுத்தெடுத்து அடுத்த லெவலுக்கு கொண்டு போவதற்கு திணறிக் கொண்டுதான் வருகிறார்.

ஆனாலும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப போட்டியாளர்கள் காரசாரமாக இல்லாத போது எப்படி சுவாரஸ்யத்தை எதிர்பார்க்க முடியும். அந்த வகையில் இந்த முறை தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள் அனைவருமே மோசம் என்று சொல்லும் அளவிற்கு தான் விளையாட்டு இருக்கிறது. சரி இவங்க தான் இப்படி இருக்கிறாங்க என்றால் புதுசாக உள்ள போன ஆறு போட்டியாளர்களாவது இந்த கேமை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர்களும் சொல்வதற்கு ஏற்ப ஒன்றுமில்லை. அங்கு என்ன நடக்கிறது என்று நாம் வெளியில் இருந்து பார்க்கிறோம், புதுசாக போன போட்டியாளர்கள் உள்ளே உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு அங்கு நடப்பதை பார்ப்பது போல தான் இருக்கிறது. இனி அவ்வளவுதான் விஜய் டிவி ரியாலிட்டி சோவை இழுத்து மூட வேண்டியது தான் என்பதற்கு ஏற்ப தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

- Advertisement -

Trending News