வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

3 முறை எஸ்கேப் ஆன சண்டக்கோழி இந்த முறை சிக்கிருச்சு.. BB8-ல் இந்த வாரம் வெளியாகும் பெண் போட்டியாளர்

Bigg Boss8: பிக் பாஸ் எட்டாவது சீசனின் நான்காவது வாரத்தில் யார் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் இந்த தகவலை வெளியிட்டு இருப்பவர் கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட ஐஷுவின் அப்பா அஷ்ரப்.

பிக் பாஸ் நடக்கும் படப்பிடிப்பு தளத்திலிருந்து அஷ்ரப் இந்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் புதிதாக எந்த போட்டியாளர் உள்ளே வரப் போகிறார் என்ற அப்டேட்டையும் கொடுக்க இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

BB8-ல் இந்த வாரம் வெளியாகும் பெண் போட்டியாளர்

பிக் பாஸ் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்திருந்த நிலையில் ரவீந்தர், அர்ணவ் , தர்ஷா குப்தா ஆகியோர் வரிசையாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். 24 மணி நேர எவிக்ஷனில் வீட்டை விட்டு வெளியேறி இருந்த சாச்சனா நான்கு நாட்களுக்குள் வீட்டுக்குள் வந்து அதிரடி காட்டினார்.

வழக்கமான பிக் பாஸ் போல் இல்லாமல் இந்த சீசன் ஆண்கள் மற்றும் பெண்களை தனிமைப்படுத்தி போட்டி போட வைத்திருப்பது தான் சுவாரசியத்தை அதிகரித்திருக்கிறது. அதிலும் பெண்கள் கூட்டணியில் இருக்கும் சுனிதா, ஜாக்குலின், பவித்ரா போன்ற விஜய் டிவி ப்ராடக்டுகளால் அந்த அணிக்கு மக்களிடையே வரவேற்பு கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறது.

இந்த வாரம் அருண், ஜாக்குலின், சத்யா, ரஞ்சித், பவித்ரா, சுனிதா, ஜெஃப்ரி அன்ஷிதா, தீபக் என ஒன்பது போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இதில் பவித்ரா அல்லது அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறுவார் என ஓரளவுக்கு கணிக்கப்பட்டது.

அதிலும் அன்ஷிதா வாராவாரம் குறைவான ஓட்டுகளுடன் ஜஸ்ட் பாஸ் ஆகி தான் வீட்டிற்குள் இருக்கிறார். இந்த நிலையில் அன்ஷிதா தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக அஷ்ரப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

Trending News