சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிக் பாஸ் வீட்டில் அலப்பறையை கூட்டப் போகும் 5 வைல்டு கார்டு என்ட்ரி.. எதிர்பார்ப்பை கிளப்பிய அஜித் நண்பர்

BB 7 Wild Card Contestants: மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் 15 போட்டியாளர்களுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, மற்றும் விஜய் வர்மா வெளியேறிய நிலையில் தற்போது வைல்டு கார்டு என்ட்ரி ஆக ஐந்து பேர் உள்ளே வர இருக்கிறார்கள்.

இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடு என்பதால் வைல்ட் கார்டு என்ட்ரியும் முந்தைய சீசனை விட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக வைல்ட் கார்டு என்ட்ரி இருப்பதாக அறிவித்திருந்தார். வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்கள்.

தற்போது யார் இந்த ஐந்து போட்டியாளர்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த வி ஜே அர்ச்சனா இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் முதல் நாளே வீட்டிற்குள் செல்ல வேண்டியவர். அதற்கான ப்ரொபைல் ஷூட்டிங் எல்லாம் முடிக்கப்பட்டு இருந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் செல்லவில்லை.

அட்டகத்தி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கானா பாலா, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக திருநங்கைகளுக்கும் வாய்ப்புகள் கொடுத்தார்கள். அந்த வகையில் ஐந்தாவது சீசனில் நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து ஆறாவது சீசனில் சிவின் கலந்து கொண்டார். இந்த சீசனில் யார் அந்த திருநங்கை போட்டியாளர் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது.

நமிதா மாரிமுத்துவின் வளர்ப்பு மகள் பிரவீனா மாயா என்னும் திருநங்கை தான் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார். இவரை சில வருடங்களுக்கு முன்பு தான் நமீதா தத்தெடுத்து இருக்கிறாராம். மேலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிய பப்லு வைல்டு கார்டு என்ட்ரி ஆக நுழைய இருக்கிறார். இவர் நடிகர் அஜித்குமாரின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி என்பவர் இந்த சீசனின் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வருகிறார். இவர் தென் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு வர்ணனை செய்தது மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த ஐந்து போட்டியாளர்களும் உள்ளே என்ட்ரி கொடுக்க இருப்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மூணு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது.

- Advertisement -

Trending News