இந்த வார வைல்ட் கார்ட் என்ட்ரி இவங்க தான்.. எலிமினேஷன் இல்லாததால் பத்திகிட்டு எரிய போகும் பிக்பாஸ் வீடு

BB 7 Wild Card Entry: விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பித்தது. இதுவரை நடந்த ஆறு சீசன்களை விட இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து பரபரப்பாக தான் போய்க்கொண்டு இருக்கிறது. முதல் வாரமே அக்ஷயா எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில், எழுத்தாளர் மற்றும் நடிகர் பவா செல்லதுரை தானாகவே வெளியேறி விட்டார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் இந்த வாரம் மாயா வெளியேற வேண்டும் என்று ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் முடிவு செய்து இருந்த நிலையில், ஏற்கனவே பவா வெளியேறி விட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என முடிவாகி இருக்கிறது. இந்த விஷயம் இதுவரை போட்டியாளர்களுக்கு தெரியாது.

இந்த வாரம் முழுக்க மாயா செய்த சில வேலைகளால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்களும் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள். எப்படியும் வார இறுதி நாளில் எலிமினேஷன் இல்லை என்று தெரியும் பொழுது ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் பற்றி எறிய போகிறது. மேலும் எலிமினேஷனில் இருந்து தப்பித்ததால் மாயா இனி தொடர்ந்து தன்னுடைய கோல்மூட்டி வேலையை செய்வாரா அல்லது மாற்றிக் கொள்வாரா என வரும் வாரங்களில் தான் தெரியும்.

இந்த நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் நுழைய இருக்கிறார். பிக் பாஸில் முதல் மூன்று சீசன்களில் நிகழ்ச்சி ஓரளவுக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் போது தான் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும். ஆனால் சமீபத்திய சீசன்களில் அவ்வப்போது ஆட்களை இறக்கி கொண்டு தான் இருந்தார்கள். அதிலும் இந்த சீசனில் மூன்றாவது வாரத்திலேயே இந்த என்ட்ரி இருக்கிறது.

நடிகை மற்றும் மாடல் வி ஜே அர்ச்சனா தான் பிக் பாஸ் ஏழாவது சீசனில் முதல் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைய இருக்கிறார். இவர் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது உள்ளே நுழைவார் என பேசப்பட்ட நிலையில். மூன்றாவது வாரம் என்ட்ரி கொடுக்கிறார். இவருக்கு சீரியல் ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் மூலம் கண்டிப்பாக இவர் பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நிற்பார்.

ராஜா ராணி 2 சீரியல் மூலம் மக்களிடையே அறிமுகமான அர்ச்சனா அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். அதன் பின்னர் விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். பாரதி கண்ணம்மா முதல் சீசனில் ஹீரோவாக நடித்த அருணுக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக கூட இடையில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்